இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 20
🔸️ பக்தியுள்ள விதவைகளை ஆதரிக்கும் தேவன்! 🔸️
வட இந்தியாவில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததற்காக கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கணவருடைய இளம் ஏழை விதவையை நான் சந்தித்தேன். அவளுடைய சாட்சி என் நெஞ்சை நெகிழச் செய்தது! தன் சிறு குழந்தைகளோடு நின்று கொண்டிருந்த அந்த விதவை "என் கணவரின் இரத்தம் சிந்தப்பட்ட அதே இடத்தில் ஒரு சபை எழும்ப வேண்டும்! அதுவே என் ஜெபம்!!" எனக் கெம்பீரித்தார். அந்த சகோதரியின் கண்ணீர் மெய்யாகவே "வாகை சூடும் ஜெயத்தின் கண்ணீராகவே" இருந்தது.
நம் ஆண்டவர் மெய்யாகவே விதவைகளுக்கும் தகப்பனற்றவர்களுக்கும் தேவனானவர். ஓர் உவமையின் மூலமாய் "ஜெபத்தை" இயேசு கற்றுக் கொடுத்தபோது, தன் எதிராளியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஓர் அநீதியான நியாயாதிபதியினிடத்தில் சென்ற "ஒரு விதவைக்கே" நம்மை ஒப்பிட்டுக் கூறினார். இந்த விதவை விடாப்பிடியாய் கெஞ்சி, தன் பாதுகாப்பை பெற்றுவிட்டாள்!
அதேபோல், மற்றவர்கள் "சிறிய தொகை" என எண்ணிய இரண்டு காசுகளை தேவனுக்குப் படைத்த ஒரு விதவையைத்தான் இயேசு அநேகருக்கு முன் பகிரங்கமாய் மெச்சிக் கொண்டார்! அவள் தந்த காணிக்கை, தன் ஏழ்மையில் தன் முழு ஜீவனத்துக்குரியதையும் கொடுத்த அதிக விலைக்கிரயம் கொண்ட காணிக்கை ஆகும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் யாதெனில், நாம் அவருக்காகச் செய்திடும் "ஒவ்வொரு சிறிய தியாகங்களையும்" இயேசு பார்க்கிறார் என்பதேயாகும்!
அதுவும் குறிப்பாக நம் துன்பங்கள், கண்ணீர்களின் மத்தியில் படைத்திடும் தியாகக் காணிக்கைகளை இயேசு பரவசத்துடன் காண்கிறார்!!
பக்தியுள்ள விதவைகளைக் குறித்து வேதாகமம் குறிப்பிடுகையில், அவர்கள் "பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவுபவர்கள்" எனக் குறிப்பிடுகிறது (1 தீமோத்தேயு 5:10). அதாவது, அவள் தன்னுடைய ஊழியத்தினால் தேவ ஜனங்களின் இருதயத்தை மகிழச் செய்துவிடுவாள்! என்பதேயாகும்.
இவ்வாறு தேவனுக்கும் தேவனுடைய ஜனத்திற்கும் இந்த விதவை எவ்வாறு மகிழ்ச்சியை கொண்டு வந்தாள்? அவள் முதலாவது தன்னுடைய பாரங்களையும், கவலைகளையும், கண்ணீர்களையும் ஆண்டவருடைய பாதத்தில் இறக்கி வைத்துவிட்டாள் என்பதே அந்த இரகசியமாகும்!!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! விதவைகளின் தேவனாகிய உம் அன்பை ருசித்தவர்கள், பிறரையும் தெய்வீக நேசத்தால் நேசிப்பார்களே! அந்த தெய்வ நேசம் எங்களையும், விதவை சகோதரிகளையும் நிரப்புவதாக! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments