"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 14
🔸️ பணமல்ல, தேவனே நமது ஒரே எஜமான்! 🔸️
நாம் இந்த உலகத்தில் வாழும் காலமெல்லாம் ஒவ்வொரு நாளும் பணத்தை கையாள வேண்டியதாயிருக்கிறது. இயேசுவின் சீஷர்களாகிய நாம் கவனமாயிராவிட்டால், தேவனையும் நேசித்து அதேசமயம், உலகப் பொருள்களையும் நேசிக்கும் அபாயத்தில் சிக்கிக்கொள்ள முடியும்!
நாம் ஆண்டவரின் சீஷர்களாய் இருக்கும் பாக்கியத்தை பறித்துக்கொண்டு, பணம் நம்மை மிக எளிதில் வளைந்து பற்றிக்கொள்ள முடியும். ஆகவேதான், நாம் எவ்வாறு சாத்தானைக் குறித்து சாதகமான மனப்பான்மை வைத்திருக்க முடியாதோ அதேபோல, பணத்தின் மீதும் ஒரு சாதகமான மனப்பான்மை நாம் வைத்துக்கொள்ளவே முடியாது.
ஒன்று, ஆண்டவர் இயேசுவின் சீஷர்களாய் இருந்திட வேண்டும்! அல்லது உலகப் பொருள்களின் சீஷர்களாய் நாம் இருந்திட வேண்டும்!! ஆம், இந்த இரண்டிற்குமிடையே சீஷர்களாய் நாம் ஒருபோதும் இருந்திட முடியாது!!
நம்முடைய நோக்கம் தேவனைப் பிரியப்படுத்துவதாக இருக்கவேண்டும்.... அல்லது நம்முடைய நோக்கம் பணத்தைப் பிரியப்படுத்துவதாய் இருக்க வேண்டும், அவ்வளவுதான்! ஏனெனில், இந்த இரண்டும், 'ஒரு காந்தத்திற்கு வடதுருவம் தென்துருவம் போலவே' எதிரும் புதிருமாய் இருக்கிறது. நாம் மெய்யாகவே தேவன்பால் ஈர்க்கப்பட்டவர்களாய் இருந்தால், பணத்தைவிட்டு தூர விலகி நிற்போம்! தேவனை முழுவதுமாய் நேசிக்க வேண்டுமென்றால், உலகப் பொருட்களை முற்றிலுமாய் வெறுத்தே ஆகவேண்டும். ஒன்று, "இயேசு கூறிய இந்த சத்தியம் மெய்தான்" என நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது 'இயேசு பொய் சொல்லுகிறார்' என அவரை விட்டு நீங்கள் விலகி நிற்க வேண்டும்!
பணத்தை அசட்டை செய்வதின் பொருள், 'நாங்கள் பணத்திற்காக கவலை கொள்ள மாட்டோம்!' என்பதுதான். நாம் அதை உபயோகப்படுத்துகிறோம் ..... ஆனால் பணத்தோடு பிடிப்பு கொண்டிருப்பதில்லை! பரலோகத்தின் வீதிகள் (தரை) தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது! இந்த பூமியிலோ தங்கத்தை தலைக்கு மேல் உயர்த்தி வைத்திருக்கிறார்கள்!.... ஆனால் பரலோகத்திலோ இதே தங்கம் நம் பாதத்திற்கு கீழாய் வைக்கப்பட்டிருக்கும்!! இந்த பூமியில் இருக்கும்போதே தங்கத்தை தங்கள் கால்களுக்கு கீழாய் வைத்திருக்க கற்றுக்கொண்டவர்களுக்காகவே பரலோகம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! உம்மைவிட்டு பிரிப்பதற்கு சதா போராடும் இந்த 'பணம்' என்ற எஜமானைக் குறித்து ஜாக்கிரதை கொண்டு, உம்மை மாத்திரமே "பற்றி" வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments