"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 15
🔸️ பணத்தைக் கையாளுவதில் சமநிலை பிரமாணம்! 🔸️
சீஷர்கள் தங்கள் திருமணத்தையும், வேலையையும், சொத்துக்களையும், பணத்தையும் விட்டுவிட்டு வனத்தில் வாழும் துறவிகளைப் போல இருக்கும்படி தன் சீஷர்களை அவர் ஒருபோதும் அழைக்கவில்லை. கிறிஸ்தவர்கள் யோவான் ஸ்நானகனின் சீஷர்களாய் அல்ல.... ஆண்டவராகிய இயேசுவுக்கே அவர்கள் சீஷர்கள்! இயேசு தன் ஜீவியத்தின் பெரும்பகுதியை ஒரு தச்சனாக இருந்து பணம் சம்பாதித்து தன் குடும்பத்தை போஷித்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இப்பூமிக்குரிய காரியங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்போதும் சமமான மனநிலையே கொண்டிருந்தார். ஒரு திருமண விருந்தில் ஏராளமான திராட்சை ரசத்தை அவரால் செய்திட முடிந்தது....அதுபோலவே நாற்பது நாட்கள் உபவாசமும் அவரால் இருந்திட முடிந்தது! இது போலவே, ஓர் உண்மையான சீஷன், ஒரு சிறந்த விருந்தை களித்திருக்கவும் அறிந்திருப்பான்.... அதேசமயம் தேவையான சமயங்களில் உபவாசிக்கவும் அறிந்திருப்பான்!!
நம் யாவருக்குள்ளும் "பண ஆசை" குடிகொண்டிருக்கிறது. "நான் பணத்தை நேசிக்கவில்லை!" என எண்ணுகிறவன் தன்னையே ஏமாற்றிக் கொள்ளுகிறவனாய் இருப்பான் அல்லது ஒரு பொய்யனாக இருப்பான்! ஏனெனில், எல்லா மானிடனும் பணத்தை நேசிக்கிறான்!! "பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" (1தீமோ.6:10) என்றே வேதாகமம் ஆணித்தரமாக கூறுகிறது. இத்தீமையிலிருந்து நம்மை விடுவிக்க ஆண்டவரால் மாத்திரமே முடியும்!
வேதாகமத்தில் காணும் அநேக மாதிரிகள் முதலாவது நன்றாக ஓடி....பின்பு பணத்திற்கு பின்பாக ஓடி, தேவனுடைய உயர்ந்த பங்கை இழந்து போனார்கள்! பணம் சம்பாதிப்பதற்காகவே சோதோமிற்கு சென்ற லோத்து, அதனிமித்தம் தன் முழு குடும்பத்திற்கும் அழிவைக் கொண்டு வந்தான்! பணத்திற்காக தீர்க்கதரிசனம் சொன்ன பிலேயாம் தன்னையே அழித்துக் கொண்டான்! நாகமானின் பணத்தைத் தேடி ஓடிய கேயாசி, தான் தேவனுடைய ஒரு தீர்க்கதரிசியாகும் சந்தர்ப்பத்தை இழந்து போனான்! இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து, உத்தம அப்போஸ்தலன் பவுலை விட்டு தேமா விலகிச் சென்றான்! (2 தீமோத்தேயு 4:10) . இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் இன்றைய கிறிஸ்தவ சரித்திரத்தில் குவிந்து கிடக்கின்றன!! நாமோ தெய்வ பயத்துடன் வாழக்கடவோம்!!
ஜெபம்:
எங்கள் பரலோக தகப்பனே! இவ்வுலகத்தில் எல்லோரையும் போலவே வாழ்ந்தாலும், உலகத்தால் கறைபடாத வாழ்க்கை வாழ்ந்திட எங்களுக்கு போதிய ஞானம் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments