Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 17

 "இன்று அவருடைய சத்தம்"


நவம்பர் 17


🔸️ பணவிஷயத்தில் நீதியாயும், உண்மை உள்ளவர்களாயும் இருக்கவேண்டும்! 🔸️


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்பத்தையும் மீனையும் திரளாய் பெருக்கச் செய்திருந்தாலும், தன் சீஷர்களை நோக்கி, "ஒன்றும் சேதமாகாதபடிக்கு மீதியான துணிக்கைகளை சேர்த்து வையுங்கள்" என கட்டளையிட்டார்! (யோவான் 6:12). பார்த்தீர்களா, ஆண்டவர் வீணாக்குதலை வெறுக்கிறார்!! அனேக விசுவாசிகள் தங்கள் குடும்ப செலவீனத்தில் ஊதாரிகளாகவே இருக்கிறார்கள். நீங்கள் அப்படியிருந்தால், ஒவ்வொரு மாதமும் வரவு-செலவு கணக்கு எழுதிப்பார்த்து, உங்கள் பணம் எவ்வழியில் வீணாகிறது என்பதை கண்டுபிடியுங்கள். இவ்விஷயத்தை நீங்கள் "சீரியஸாக" எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து எக்காலமும் கடனுக்குள்ளேயே புதைந்து கிடப்பீர்கள்.  


இன்று விசுவாசிகள் அநாவசியமான அனேக செலவீனங்களில் ஈடுபடுவதற்கு முக்கிய நோக்கம், "இவர்களுக்கு மனிதர்களின் புகழ்ச்சி வேண்டும்" அவ்வளவுதான்!.... குறிப்பாக திருமண வைபவம்!! தடபுடலாகத் திருமணம் நடத்த வேண்டும் என்பதற்காகவே இன்று அநேகர் கடனுக்குள் வீழ்கிறார்கள். இது என்ன? மதியீனம்.... மதியீனத்தின் உச்சகட்டம்! இதைப்போலவே, தங்கள் வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்களை தருவிக்கிறார்கள். பிறரைத் தங்களின் தடபுடல் விருந்திற்கும் அழைக்கிறார்கள். எதற்காக? தங்களுக்குப் புகழ்ச்சி வேண்டும் என்பதற்காகத்தான்! இவை அனைத்தும் மதியீனத்தின் மொத்த உருவம்!! 


நாம் விடுதலையோடு தேவனுடைய பார்வையில் மாத்திரமே ஜீவிக்க வேண்டுமென்றால், மனிதர்களின் புகழ்ச்சிக்கு கண்டிப்பாகச் சாக வேண்டும். அப்போது மாத்திரமே நாம் கடனிலிருந்தும் விடுதலையாகியிருக்க முடியும்!!


நாம் பணம் செலவு செய்வதில் உண்மை அற்றவர்களாக இருந்தால், தேவன் தன் இராஜ்யத்தின் மெய்யான ஐசுவரியத்தை நமக்கு ஒருக்காலும் தரவே மாட்டார் (லூக்கா 16:11).


இன்றைய அனேகமான பிரசங்கிகளின் வறண்டுபோன பழங்கதைப் பிரசங்கங்களைக் கவனிக்கும்போது, இவர்களுக்கு மெய் ஐசுவரியமான "தேவனுடைய வார்த்தையில் வெளிப்பாடு இல்லை" என்பதை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இவர்கள் பணவிஷயத்தில் உண்மை இல்லாதிருப்பதே இதற்குக் காரணம்! தேவன் தன் வார்த்தையிலிருந்து நமக்கு வெளிப்பாடு தரவில்லையே என உணரும்போது, நாம் பணவிஷயத்தில் உண்மையில்லாமல் இருக்கிறோமா என நம்மைப் பரிசீலனை செய்து பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒருவேளை அது அநீதியாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'கவனக்குறைவும்' 'வீணாக்குதலுமாய்' இருக்கக்கூடும்!


ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! பணவிஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட எங்கள் தவறை மன்னித்து, அதில் உண்மையாய் இருந்து, உம்முடைய மெய்யான ஐசுவரியம் பெற்றிட உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".    


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments