"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 18
🔸️ நம் தேவைகளுக்கு தேவனையே விசுவாசித்திட வேண்டும்! 🔸️
ஒரு நாத்திகனுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டால், அவன் உடனே வேறு ஒரு மனிதனிடம் உதவி தேடி ஓடுவான்! ஏனென்றால், இவன் 'தேவன் இருக்கிறார்' என்பதை நம்புவதில்லை! இப்போது நம்மில் காரியம் எப்படியிருக்கிறது? நமக்கு தேவை ஏற்படும்போது நாம் என்ன செய்கிறோம்? பொருளாதார நெருக்கடியைக் கொடுத்தும் தேவன் நம்மை சோதிக்க முடியும். அப்போஸ்தலர்களும் அடிக்கடி பொருளாதாரத் தேவைக்குள் பிரவேசித்திருக்கிறார்கள் (1கொரிந்தியர் 4:11). "ஆனால்" அவர்கள் ஒருபோதும் பிச்சை எடுக்கும் அல்லது கடன் வாங்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளாக வீழ்ந்ததே கிடையாது. மாறாக, தேவன் தங்கள் தேவைக்குத் தருவார் என அவரையே நம்பியிருந்தார்கள், தேவனும் அவ்விதமே தந்தருளினார்!
அருமை ஆண்டவர் தன் உண்மையுள்ள பிள்ளைகளை ஒருபோதும் கைவிடவே மாட்டார்! அவசியமானால், தன் தாசன் எலியாவைப் போஷித்தது போல, காகங்களைக் கொண்டும் எப்படியாவது போஷித்து விடுவார்!
இஸ்ரவேலர்கள் 'உதவி நாடி' எகிப்துக்குத் திரும்பியபோது, அவர்களுக்குத் துன்பமே எஞ்சியது! தேவனோ அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்றே விரும்பினார். நம் பொருளாதார தேவைக்காக தேவனிடம் மாத்திரமே ஓடி 'விசுவாசித்து' ஜெபித்திருக்கிறோமா? அல்லது அந்த நாத்திகனைப் போல நடந்து கொள்கிறோமா? (இது குறித்து ஏசாயா 30:7-21, சங்கீதம் 121 கூறும் வசனங்களை வாசித்துப் பாருங்கள்).
நம்மை மற்ற விசுவாசிகளோடு மதியீனமாய் ஒப்பிட்டுப் பார்க்காமல், தேவன் நமக்கு மகிழ்வுடன் கொடுத்ததைக் கொண்டு 'போதுமென்ற மனதுடன்' வாழக் கற்றுக் கொள்ளும்போதுதான், "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" (எபிரேயர் 13:5) என தேவன் உரைத்த வாக்குத்தத்தம் நம்மில் நிஜமாய் மாறிட முடியும்!
முழு இருதயத்தோடு கீழ்ப்படிபவர்களுக்கே அவர் உதவுவார்! (எரேமியா 29:11-13). தன்னை கனம் பண்ணுகிறவர்களைத் தேவன் நிச்சயம் கனம் பண்ணுவார்!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! எந்த தேவையின் சூழ்நிலையிலும் 'மனுஷரையல்ல', உம்மை நோக்கி ஓடி வரும் நல்ல விசுவாச உள்ளம் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments