Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 23

 இன்று "அவருடைய" சத்தம்


நவம்பர் 23


🔸️ "பாலிய இச்சை தூண்டுதலுக்கு விலகி ஓட வேண்டும்!" 🔸️


சிம்சோனும், தாவீதும் பாலிய இச்சையின் மூலமாகவே சாத்தானால் இழுக்கப்பட்டார்கள். இந்த தாவீது கோலியாத்தை ஜெயித்துவிட்டான். ஆனால், தன் சொந்த இச்சையை ஜெயித்துவிட அவனால் முடியவில்லை! பெலசாலிகளாக இருந்த அநேக தேவ மனிதர்கள் இந்த பகுதியில் கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.


இக்குறிப்பிட்ட பகுதியில் கவனயீனமாகவோ அல்லது ஒழுக்கத்திற்குரிய கட்டுப்பாடு இல்லாதவர்களாகவோ இருப்பவர்கள், மிக எளிதில் சாத்தானுடைய ஆயுதத்திற்கு பலியாகி விடுகிறார்கள். உதாரணமாய், பெண்களின் இன்றைய நாகரீக ஆடைகளைப் பாருங்கள். தேவன் உடுத்தி மறைக்க விரும்பிய பகுதிகளில் எல்லாம் "டிசைன்ஸ்" என்ற பெயரில் தங்கள் மறைவான சரீர பகுதிகளை திறந்து வெளியரங்கமாக்குகிறார்கள்!


ஆதாம், ஏவாளின் சரீரம் உடுத்தி நன்கு மூடப்பட வேண்டும் என்பதை ஆதியாகமம் 3:21 வசனத்தின் மூலமாய் தேவன் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.  


'அழகு மாடல்கள்' என்ற பெயரில் "தங்கள் சரீரத்தை நிர்வாணப்படுத்தும்" சினிமாக்கள் மூலமாகவும், சாலையின் இருமருங்கும் விளம்பரப்படுத்தும் சுவரொட்டிகள் மூலமாகவும், பத்திரிக்கை மற்றும் மாத இதழ்கள் மூலமாகவும் சாத்தான் மிக கவனமாய் திட்டம் வகுத்து, எண்ணற்ற புருஷர்களை அவர்களின் காம இச்சைகளுக்கு அடிமைகளாக்கும் வலையில் வீழ்த்திவிட்டான்! 


இக்கொடிய நாட்களில் யோபுவைப் போலவே, நம் கண்களையும் "உடன்படிக்கையின் கட்டுப்பாட்டிற்குள்" வைத்து நம் ஆசை இச்சைகளை அடக்கி ஆளவேண்டியது அவசியமாயிருக்கிறது! (யோபு 31:1). இந்த 'இழிவான ஆசைகளை தூண்டி எரிய வைத்திடும்' யாதொன்றையும் காண்பதற்கோ அல்லது வாசிப்பதற்கோ நாம் மறுத்துவிட வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாட்டை தாவீது வைத்திருக்கவில்லை, ஆகவேதான், அவன் பாவம் செய்தான்! (2சாமுவேல் 11:2). 


இந்த கசப்பான பாடத்தை தாவீது கற்ற பின்புதான் "கர்த்தாவே, மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கிவிடும்" என ஜெபித்தான் (சங்கீதம் 119:37). இதே தவிப்பான ஜெபத்தை நாமும் ஜெபிப்பது நமக்கு நல்லது!!


ஜெபம்:

எங்கள் பரம தந்தையே! வேசித்தன ஆவி நிறைந்த இந்த உலகில், யோபுவைப் போல் 'கண்டிப்புடன்' வாழும் தூய்மை உள்ளம் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments