Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 27

 இன்று "அவருடைய" சத்தம்


நவம்பர் 27


🔸️ பிறரை நியாயம் தீர்க்கக்கூடாது! ஆகிலும் ஆவிக்குரிய விழிப்பு வேண்டும்! 🔸️


"கர்த்தர் வருமளவும் காலத்திற்கு முன்னே தீர்ப்பு சொல்லாதிருங்கள்" என பவுல் அறிவுறுத்தும்போது (1கொரி 4:5), எவைகளைக் குறித்து தீர்ப்பு செய்யக்கூடாது என்பதைத் தெளிவாக விளக்கினார். 1) இருளில் மறைந்திருக்கிறவைகள். அதாவது, சிந்தை வாழ்க்கை போன்ற மனுஷர் காணமுடியாத அந்தரங்க வாழ்க்கை. 2) இருதயத்தின் யோசனைகள். அதாவது, ஒருவருடைய இருதயத்தில் கொண்டிருக்கும் மறைவான நோக்கங்கள் (வசனம் 5). ஆம், இவைகளைக் கடைசி நாளில் கிறிஸ்துதான் நியாயந்தீர்ப்பார். எனவே, கிறிஸ்து வருவதற்குமுன், காலத்திற்கு முன்பே, நாம் எந்த ஒரு மனிதனின் மறைவான இருதய நோக்கங்களை நியாயந்தீர்க்காதிருக்க ஜாக்கிரதையாய் இருக்கக்கடவோம்!! 


நம் ஒவ்வொருவருடைய மாம்சத்திலும் நன்மை ஏதும் இராதபடியால், நம்மைச்சுற்றி உள்ளவர்களுடைய கிரியைகளைக் கண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமான அபிப்பிராயத்தை நமக்குள் உருவாக்கிக் கொள்ளுகிறவர்களாவே இருக்கிறோம். அந்த சமயங்களில் நல்ல எண்ணங்களைவிட தீய சிந்தையே நமக்குள் உருவாக சோதிக்கப்படுகிறோம். இதனிமித்தமே, கர்த்தர் மாத்திரமே நியாயம் தீர்க்கக்கூடிய 'மறைவான ஜீவியத்தை' நாம் ஒருக்காலும் நியாயம் தீர்க்காதிருப்பதற்கு கட்டளையிடப்பட்டிருக்கிறோம்!


இவ்வாறு பிறரை நியாயம் தீர்க்க வேண்டாம் என இயேசு மத்தேயு 7:1-5 வசனங்களில் கூறியபோதும், 15-16ம் வசனங்களில் 'கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்" என்றும் கூறினார். இங்கே இயேசு நமக்கு போதிக்கும் பகுதியான சத்தியம் யாதெனில், 'தெளிவாய் பகுத்தறிந்து நியாயந்தீருங்கள்' என்பதேயாகும். 


அவ்வாறு பகுத்தறிவதற்கு அவர்களின் "கனிகளைக்" காணும்படியும் இயேசு புத்தி சொன்னார். ஆம், அவர்களுடைய மன நோக்கங்களையும், சிந்தனைகளையும் அல்ல, அவைகளைக் குறித்து நாம் எதுவுமே அறிந்துகொள்ள முடியாது. மறைவானவைகளை நியாயந்தீர்க்கிற கர்த்தருக்கே அவைகளை நாம் ஒப்புக்கொடுத்திட வேண்டும்.  


ஆனால், வெளியரங்கமான கனிகளை வைத்து ஒருவன் உண்மையான தீர்க்கதரிசியா? அல்லது கள்ளத்தீர்க்கதரிசியா? என்பதை நாம் யாவரும் தெளிவாகப் பகுத்தறியக் கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்பதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாஞ்சை ஆகும். 


ஜெபம்:

எங்கள் அன்பின் ஆண்டவரே! பிறரின் மன நோக்கங்களை நீர் ஒருவரே நியாயம் தீர்ப்பவர்! நாங்கள் அதற்கு விலகியிருந்து, தெளிந்த புத்தியோடு ஆவிக்குரிய காரியங்களை நிதானத்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments