Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 29

 இன்று "அவருடைய" சத்தம்


நவம்பர் 29


🔸️ இடுக்கமான வாசலுக்குப் பின்பாக உள்ள "ஜீவனில்" நம் விருப்பம் இருப்பதாக! 🔸️


ஒரு கிறிஸ்துவ பொதுக்கூட்டத்தில் சுமார் 2 இலட்சம் ஜனங்கள் கூடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அத்திரளான கூட்டத்தைப் பார்த்து, "உங்களில் எத்தனைபேர் பரலோகம் செல்ல விரும்புகிறீர்கள்?" என்ற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். அக்கூட்டத்தில் புத்தியுள்ள எந்த மனிதனும் தங்கள் கையை உயர்த்திவிடுவார்கள். ஆம், 2 இலட்சம் ஜனங்களும் தங்கள் கையை உயர்த்துவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை! மதியில்லாத மனிதன் மாத்திரமே நரகத்திற்குச் செல்ல விரும்புவான். 


ஆனால், இயேசுவோ ஜனங்களைப் பார்த்து, "எத்தனைபேர் இயேசுவை விசுவாசிக்கிறீர்கள்..... எத்தனை பேர் பரலோகம் வர விரும்புகிறீர்கள்?" என்ற கேள்வியோடு நின்றுவிடாமல் "இடுக்கமான வாசலை" ஜனங்களுக்கு காண்பித்தார்!! 


அதாவது, "உங்களில் எத்தனை பேருக்கு தேவனுடைய பரிசுத்தத்தில், தாழ்மையில் பங்குபெற விருப்பம்? தன் சத்துருவை சிநேகிப்பதும், உங்களைத் துன்புறுத்துகிறவர்களை மன்னிப்பதும், தனக்காக ஆதாயத்தைத் தேடாமல் தேவனுடைய மகிமையை மாத்திரமே தேடுவதும், மற்றவர்களை நியாயந்தீர்க்க மறுப்பதுமாகிய.....தேவனுடைய சுபாவம் உங்களில் எத்தனைபேருக்கு வேண்டும்?" என்ற கேள்வியை அந்த 2 இலட்சம் ஜனங்களிடத்தில் இயேசுவைப் போலவே கேட்டுப்பாருங்கள்! குழுமியிருக்கும் ஜனங்கள் தங்கள் கையைத் தூக்குவார்களா? இல்லையா? என்பதை விட்டுவிடுங்கள்..... குறைந்தபட்சம் எத்தனை பேருக்கு இவ்வித ஜீவியத்தின்மேல் "ஆர்வம்" இருக்கிறது என்பதை கண்டறியுங்கள்!! 'இந்த வெறும் ஆர்வம்'கூட வெகு சிலரிடம் இருப்பதைத்தான் நீங்கள் பார்ப்பீர்கள்.


 எதற்காக இயேசு 'சிலர் அதைக் கண்டுபிடிப்பார்கள்' (மத்தேயு 7:14) எனக் கூறினார்? ஏனெனில் 7-ம் வசனத்தின்படி, இவ்வித ஜீவியத்தை 'வாஞ்சித்துத் தேடுபவர்களே' மிகவும் கொஞ்சம் என்பதினால்தான்!! நீங்கள் முழு இருதயமாய் திவ்விய சுபாவ ஜீவியத்தைத் தேடினால், நிச்சயம் கண்டுபிடிப்பீர்கள் என இயேசு மாறாத தன் வாக்குத்தத்தத்தை நமக்குத் தந்திருக்கிறார். இவ்வாறு தேடுகிறவர்கள்தான், தாங்கள் தேடும் திவ்விய வாழ்விற்கென எந்த விலைக்கிரயமும் செலுத்த ஆயத்தமாய் இருப்பார்கள்!


இப்போது உங்களைக் குறித்து என்ன? பரிபூரண ஜீவனை சுதந்தரித்திட, "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்" என இயேசு பரிவுடன் அழைக்கும் அழைப்பிற்கு மகிழ்வுடன் செவிகொடுக்க நீங்கள் ஆயத்தமா?  


ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! வெறும் பரலோகம் அல்ல, பரலோகத்தின் பொக்கிஷமாகிய உம் ஜீவன்மீது எங்கள் கண்கள் எப்போதும் நோக்கியிருக்க கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments