Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 28

 இன்று "அவருடைய" சத்தம்


நவம்பர் 28


🔸️ தீவிரம்கொண்டு தேடுவோர் கண்டடையும் பரிபூரண ஜீவன்! 🔸️


மனுஷீக தீர்மானத்தால் ஆண்டவராகிய இயேசு வழங்கும் பரிபூரண ஜீவனை சுதந்தரிக்க ஒருக்காலும் முடியாது என்பதை நாம் யாவரும் அறிந்து கொள்வோமாக! பின் எவ்வாறு முடியும் என்பதை ஆண்டவராகிய இயேசுவே நமக்கு அடுத்த வசனத்தில் விடை கூறி இருக்கிறார்: "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுங்கள் திறக்கப்படும்" (மத்தேயு 7:7,8).  


பார்த்தீர்களா! பரத்தின் பரிபூரண ஜீவனுக்குரிய வாழ்க்கையை நாம் தேவனிடமிருந்துதான் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வசனங்களில், ஆண்டவராகிய இயேசு வெளிப்படுத்தும் ஆதங்கம் யாதெனில், கேட்கிற ஒருவன் தொடர்ச்சியாய் கேட்கவேண்டும்... தேடுகிற ஒருவன் தொடர்ச்சியாய் தேடவேண்டும்... தட்டுகிற ஒருவன் தொடர்ச்சியாய் தட்டவேண்டும்! இந்த செயல் உங்களுக்குள் நடந்துவிட்டால், பரலோகத்தின் பரிபூரண ஜீவன் உங்களுக்குள் வந்துவிடும் என்பதில் ஒரு துளியும் சந்தேகமே இல்லை!! 


இந்த உறுதியைத்தான் அடுத்த 9, 10, 11 ஆகிய வசனங்களில் ஆண்டவராகிய இயேசு உவமையாக வெளிப்படுத்தினார். "இவ்வுலகத்திலுள்ள பொல்லாத தகப்பன்கூட மீனைக் கேட்கிற தன் பிள்ளைக்குப் பாம்பை கொடுப்பதில்லை! அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்கு கல்லை கொடுப்பதில்லை! அவ்வாறிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் (பரிபூரண ஜீவனை) கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" என இயேசு வாக்குரைத்திருக்கிறார்.


நன்மையானவைகள் என இயேசு குறிப்பிட்டவைகள்: மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 5,6,7) குறிப்பிட்ட ஒன்பது பரலோக பிரமாணங்களைச் சுதந்தரிப்பதும், ஒன்பது தவறான தீய மன நோக்கங்களிலிருந்து விடுதலையாவதுமான பரிபூரண ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியங்களே ஆகும். லூக்கா சுவிஷேசம் 11:11-13 வசனங்களில் நன்மையானவைகள் என்ற பதத்திற்குப் பதிலாக, "பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" என்றும் ஆண்டவராகிய இயேசு குறிப்பிட்டார்!


பரிசுத்த ஆவியின் வல்லமை மூலமாய் நாம் பெற்றிடும் நன்மையானவைகள், பரலோகத்திற்குரிய திவ்விய சுபாவங்களே ஆகும். இந்த திவ்விய சுபாவங்களை அல்லது பரிபூரண ஜீவனை நாம் யாவரும் பெற்றிட வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாகும். இப்பரிபூரண ஜீவனை நாம் முழுமையாய் பெறும்வரை, நாம் யாவரும் தொடர்ச்சியாய் கேட்டு... தொடர்ச்சியாய் தேடி... தொடர்ச்சியாய் தட்டி... இறுதியில் பரிபூரண ஜீவனை சம்பூரணமாய் அடைந்திடக்கடவோம்! 


ஜெபம்:

எங்கள் பரம பிதாவே! உம்முடைய பரமஜீவனை தீவிரமாய் வாஞ்சித்து, உம்முடைய பரிசுத்தாவியின் துணை கொண்டு அதைப் பெற்றுவிட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments