இன்று "அவருடைய" சத்தம்
நவம்பர் 30
🔸️ நல்ல கனி, இருதயத்தின் தூய சாரத்திலிருந்து வரவேண்டும்! 🔸️
நல்ல கனிகளைக் கொடுக்கவேண்டும் என்பதற்காக முட்புதரில் திராட்சைபழங்களைத் தொங்கவிடலாமோ? (மத்தேயு 7:16). ஆம், நல்ல கனிகளை நாமாக முயற்சி செய்து, ஒருக்காலும் அதை உற்பத்தி செய்துவிட முடியாது.
ஒரு மாமரம் தானாக உற்பத்தி செய்தா மாம்பழங்களை தொங்கவிட்டுக் கொள்கிறது? இல்லவே இல்லை! நல்ல மாம்பழங்கள் மரத்தின் ஜீவனிலிருந்து உருவானதே ஆகும். மரம் நல்லதாக இருந்தால், அது தானாகவே நல்ல கனிகளைக் கொடுத்துவிடும். அதாவது நல்ல கனிகள் வேண்டுமென்றால், நம் கவனம் முழுவதும் ஜீவன் உற்பத்தியாகும் மரத்தின்மீதும் அல்லது அதன் வேரின்மீதும் இருக்கக்கடவது!
மரத்தின் வேர்போன்று இருக்கும் நம்முடைய அந்தரங்க மனநோக்கம் தீயதாய் இருந்தால், அதாவது மெய்யாய் மனந்திரும்பாமலும், நேர்மையாய் ஒப்புரவாகாமலும், சுத்த மனசாட்சி இல்லாமலும் இருந்தால்.....நாம் எவ்வளவுதான் மாம்பழங்களை அங்குமிங்கும் தொங்கவிட்டு மனுஷருக்கு ஒரு வெளித் தோற்றத்தைக் கொடுத்து கவர்ச்சித்தாலும், அது ஏமாற்று வஞ்சகமேயாகும்.
நாம் மெய்யாகவே மரத்தை நல்லதாக மாற்ற விரும்புபவர்களாய் இருந்தால், மாம்சமாகிய வேரின்மீது இயேசு கோடாரியை வைப்பதற்கு நம்மை அனுமதிக்கிறவர்களாய் இருக்க வேண்டும். இவ்வாறு கோடாரி வேரின்மீது விழுந்து, மாம்சத்திற்கு மரணத்தைக் கொண்டு வந்துவிட்டால், பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் நம்மில் புதிய ஜீவன் தெய்வ சுபாவமாக மலர்ந்துவிடும்!
ஓர் உண்மையான தீர்க்கதரிசியை அடையாளம் காண்பதற்கு அவருடைய ஜீவியமாகிய கனிகளை வைத்துத்தான் அடையாளம் காணவேண்டும் என இயேசு தெளிவாகப் போதித்தார். ஏனெனில், கடைசி நாளில் அநேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் எழுப்புவார்கள் என வேதாகமம் எச்சரிக்கிறது. இன்று நாம் இக்கடைசி நாட்களின் ஓரத்தில்தான் நின்று கொண்டிருக்கிறோம். இக்காலத்தில் வாழும் கள்ளதீர்க்கதரிசிகளை சரியாய்ப் பகுத்தறிய வேண்டியது மிகவும் அவசியமாகிறது! நல்ல இருதயம், நல்ல கனி, நம் பிரதானமாகட்டும்!!
ஜெபம்:
எங்கள் பரலோக தந்தையே! வெளித்தோற்றத்தில் மாறும் ஜீவியம் அல்ல, இருதய அந்தரங்கத்தின் தூய்மையிலிருந்து விளைந்திடும் 'நல்ல கனி' எங்கள் வாழ்வில் பெருகிட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments