Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

டிசம்பர் 01

 இன்று "அவருடைய" சத்தம்


டிசம்பர் 1


🔸️ தேவனால் பலன் அளிக்கப்படும் பாக்கியம் வேண்டும்! 🔸️


வெளி.11:16-18 வசனங்களில், "உமது நாமத்தின்மேல் பயபக்தியாய் இருந்தவர்களுக்குப் பலனளிக்கும் காலம் வந்தது" என கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். மல்கியா புத்தகத்தின்படி, தேவன் தனக்கென "ஒரு ஞாபகப்புத்தகத்தை" வைத்திருக்கிறார். அப்புத்தகத்தை அவர் உற்று கவனித்துத், தன்னுடைய நாமத்திற்கு யார் உண்மையாகவே பயப்படுகிறார்கள் என்பதை அறிகிறார்! குறிப்பாக, ஒருவருக்கொருவரான சம்பாஷணையில் யார் தனக்குப் பயப்படுகிறார்கள் என்பதை தேவன் கண்காணிக்கிறார். மறுபடியும் பிறந்த விசுவாசிகளில் 1% க்கும் குறைவானவர்களே தங்களுடைய தனிப்பட்ட சம்பாஷணைகளில் தெய்வபயம் கொண்டிருக்கிறார்கள். எனவே தேவனுடைய ஞாபகப் புத்தகத்தில் மிக மிகக் கொஞ்சம் பேர்களே இருப்பார்கள் என்பது உறுதி. 


இந்த ஞாபகப்புத்தகம் பிரம்மாண்டமானதொரு புத்தகமாக இருக்குமென எண்ணிவிடாதீர்கள். அப்புத்தகம் மிகச் சிறியதாகவே இருக்கும். ஆகிலும் அக்கொஞ்சம் பேர்களையே தேவன் "என் சம்பத்து" என பாராட்டி மகிழ்கிறார்.


"தேவன் பலனளிக்கிற காலம் வந்தது" என்ற இந்த வசனத்தின் தொடர்பாக லூக்கா 14-ம் அதிகாரத்தில் இயேசு கொடுத்த கட்டளையைப் பார்க்கிறோம். லூக்கா 14:12-ல் "நீ பகல் விருந்தாவது, இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சினேகிதரையாகிலும்..... ஐஸ்வரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்க வேண்டாம். அழைத்தால் அவர்களும் அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு பதிலுக்குப் பதில் செய்ததாகும்" என்றார். இந்த வசனத்தின்படியான இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிய 1% விசுவாசிகளாவது ஆர்வம் காட்டுகிறார்களா? என்பது சந்தேகமே.


மேலும், 13-ம் வசனத்தில், "நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும், அழைப்பாயாக" என்றார். இவ்வசனத்தின்படியான சத்தியம், நாம் குருடர்களையும் சப்பாணிகளையும் விருந்துண்ண அழைக்க தேடிச்செல்ல வேண்டும் என்பதில்லை. மாறாக 14-ம் வசனத்தின்படி, "நமக்கு பதில் செய்ய முடியாதவர்களை" விருந்திற்கு அழைக்க வேண்டும் என்பதே இயேசு கூறிய சத்தியமாகும். அப்படிச் செய்வோமென்றால், "நீ பாக்கியவானாயிருப்பாய்" (லூக்.14:14) என இயேசு கூறினார். ஏனெனில், அவர்களிடமிருந்து பதிலுக்கு திரும்பிப் பெறாத உங்களுக்கு தேவாதி தேவனால் "நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உங்களுக்கு பதில் செய்யப்படும்" என இயேசு கூறினார். இந்நிகழ்ச்சி, கடைசி நாளில் தேவன் பலனளிக்கிற காலத்தில் நிறைவேறும்! 


தங்களுக்கு எந்த சுயலாபமும் கருதாமல் பிறருக்கு நன்மை செய்தவர்கள் கடைசி நாளில் தேவனால் பலனளிக்கப்படுவார்கள்!!   


ஜெபம்:

பரலோக பிதாவே! இப்பூமியில் பிரதிபலன் கருதி யாதொன்றும் செய்யாமல், பரலோக பிரதிபலனுக்காகவே எங்கள் ஜீவிய வாழ்க்கை இருந்திட கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments