Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

டிசம்பர் 05

 இன்று "அவருடைய" சத்தம்


டிசம்பர் 5


🔸️ சந்தேக கண்ணோட்டம் இல்லாத ஜீவியம் வேண்டும்! 🔸️


தன்னை கொலை செய்யத் தயாராய் இருந்த காயீனை கொஞ்சமும் சந்தேகம் கொள்ளாத ஆபேலின் நல்ல இருதயத்தை பாருங்கள்! காயீனை அல்ல, தன்னையே நியாயம் தீர்த்து தாழ்மையில் நொறுங்கியிருந்த ஆபேல், நாம் யாவரும் பின்பற்றவேண்டிய நல்ல மாதிரி! ஆபேலோ, காயீனின் மனோபாவத்திற்கு முற்றிலும் மாறுபட்டவனாய் இருந்ததைப் பார்த்தீர்களா? காயீன், ஆபேலைத் தன்னோடு வயல்வெளியில் "வாக்கிங்" அழைத்தபோது, ஆபேல் தன் இருதயத்தில் ஒரு துளிகூட சந்தேகம் கொள்ளாமல், தன் சகோதரனோடே நடந்தான்! (ஆதி.4:8). காயீன் தன்மீது பொறாமை கொண்டிருக்கிறான் என்பதில் அவனுக்கு சிறிதும் சந்தேகக் கண்ணோட்டமே இல்லை. ஆபேல் தன் இருதயத்தில் எவ்வளவாய் கபடற்று இருந்தான் பார்த்தீர்களா! அவன் தன்னையே நியாயம் தீர்த்து, இருதயம் நொறுங்கி இருந்தான். ஆனால் தன் சகோதரன் காயீனையோ நியாயம் தீர்க்கவேயில்லை. இந்த சுபாவமே நாம் பின்பற்றக்கூடிய நல்ல மாதிரியாய் இருக்கிறது!


தங்கள் காரியம் நன்றாய் நடந்தேறியதால், "என்மீது மற்றவர்கள் பொறாமை கொண்டிருப்பார்களோ? என்மீது கெட்ட அபிப்பிராயம் வைத்திருப்பார்களோ? எங்கே என்னை கீழே இழுத்துத் தள்ளி விடுவார்களோ?" என்றெல்லாம் ஓயாமல் சந்தேகம் நிறைந்தவர்களாக இன்று அநேகர் இருக்கிறார்கள்! மற்றவர்களுக்கு விரோதமாய் நமக்கு ஏதும் மனதில் இல்லாமல் இருக்கலாம்.....ஆனால், மற்றவர்கள் என்மீது விரோதம் வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தோடு நாம் காணப்பட முடியும். ஆ, இங்குதான் நாம் கறைப்பட்டுப் போகிறோம்!   


ஆபேலோ, தன்னைக் கொலை செய்யத் தயாராக இருந்தவன் மீதுகூட கொஞ்சமும் சந்தேகம் அற்று இருந்தான். அவனுக்கு எத்தனை நல்ல இருதயம் பாருங்கள்! இதே இருதயமல்லவா நமக்கும் தேவை!!


நெருக்கமான ஜீவ வழியில் இரு குன்றுகளின் அபாய முனைகள் உள்ளன. ஒரு குன்றின் முனை "பொறாமை" இன்னொரு குன்றின் முனை "சந்தேகம்". இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றில் நாம் விழுந்து பாதாளத்தை அடையும் வாய்ப்பு உண்டு! 


ஆபேலுக்கோ, காயீன் மீது பொறாமையோ அல்லது அவனைக் குறித்த சந்தேகமோ கொஞ்சமும் இல்லவே இல்லை! நம் சக சகோதரர்களோடு கொள்ளும் உறவில் நாம் பின்பற்றி நடக்க வேண்டிய பாதையும் இதுவே ஆகும். 


ஜெபம்:

எங்கள் பரம பிதாவே! சிறிதேனும் சந்தேகிக்காமல் கள்ளங்கபடற்ற உள்ளத்தோடு வாழ்ந்த ஆபேலைப்போல், "இவர்கள் என்னை பகைக்கிறார்களோ" போன்ற சந்தேகமற்ற "கபடற்ற" வாழ்வு தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments