Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

டிசம்பர் 09

 இன்று "அவருடைய" சத்தம்


டிசம்பர் 9


🔸️ தேவனால் முன்குறிக்கப்பட்ட வாழ்வை அறிந்து வாழும் பாக்கியம்! 🔸️


 "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் (முன்கூட்டியே) சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்."

(எபேசியர் 2:10).


பல வருடங்களுக்கு முன்பாகவே நம்மை கிறிஸ்துவுக்குள் தேவன் தெரிந்து கொண்டபோது, இப்பூமிக்குரிய வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வரையறை செய்து வைத்துவிட்டார்! இப்போது நம்முடைய கடமை என்னவென்றால், தேவனுடைய அந்த திட்டத்தை ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்து, அதன்படி பின்பற்றி நடப்பதுதான்! தேவனுடைய திட்டத்தைக் காட்டிலும் மேலான திட்டத்தை நாம் நமக்கென ஒருக்காலும் வரையறுக்கவே முடியாது!!


ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தேவன் வித்தியாசமான திட்டங்களை வைத்திருக்கிறபடியால், மற்றவர்கள் செய்வதைப் போலவே நாமும் அப்படியே செய்வதற்கு முயலவே கூடாது! உதாரணமாய், யோசேப்பைக் குறித்து தேவன் கொண்டிருந்த திட்டம் யாதெனில், "அவன் எகிப்தின் அரண்மனையில் தங்கியிருந்து, தன்னுடைய ஜீவியத்தின் பின்பகுதியான எண்பது ஆண்டுகள் மிகுந்த வசதியுடன் வாழவேண்டும் என்பதாய் இருந்தது!" இப்படியிருக்க, யோசேப்பின் மாதிரியை மோசே பின்பற்றி வசதியையும், ஆடம்பரத்தையும் விரும்பியிருந்தால்.... அவனுடைய சொந்த வாழ்க்கைக்குரிய தேவனுடைய சித்தத்தை நிச்சயமாய் இழந்திருப்பான்!


இன்றும் அதைப்போலவே ஒரு சகோதரன் தன் ஜீவிய காலமெல்லாம் அமெரிக்க தேசத்தில் வசதியுடன் வாழ தேவன் விரும்பியிருக்கக்கூடும்! ஆனால் இன்னொரு சகோதரனையோ தன் ஜீவ காலமெல்லாம் வட இந்தியாவின் உஷ்ணத்திலும் தூசியிலும் உழன்று வாழும்படி அவர் வைத்திருக்கக்கூடும்!! இந்த இருவருமே, தேவன் தங்கள் வாழ்வில் கொண்டிருக்கும் திட்டத்தை அறிந்தவர்களாய் திருப்தியுடன் இருக்கவேண்டுமேயல்லாமல், ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்து பொறாமைப்படவோ அல்லது குறைகூறவோ கூடாது! 


இந்திய தேசத்தில்தான் ஊழியம் செய்யும்படி தேவன் என்னை அழைத்திருக்கிறார் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் என்னைப் போன்ற அழைப்பை மற்றவர்களும் பெற்றிருக்க வேண்டுமென நான் ஒருவரையும் வற்புறுத்தியதேயில்லை. இருப்பினும், நாம் நம்முடைய சுய கனத்தைத் தேடினாலோ அல்லது சொகுசு வாழ்க்கையை விரும்பினாலோ அல்லது மனுஷர்களுடைய அங்கீகாரத்தை நாடினாலோ, நாம் ஒருக்காலும் தேவன் நமக்கென்று வைத்திருக்கும் அவரது திட்டத்தை கண்டுபிடிக்கவே முடியாது!   


ஜெபம்:

அன்பின் தகப்பனே! எங்கள் வாழ்க்கையில் நீர் முன்குறித்துவைத்த நியமனத்தை உம்மிடம் கேட்டு, அறிந்து, அதன்படி வாழ்ந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments