இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 11
🔸️ தேவபக்தியின் வழி துன்பத்தின் வழி என்பதை மறக்கலாகாது! 🔸️
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்"
(2 தீமோத்தேயு 3:12).
ஆண்டவராகிய இயேசு தன்னுடைய சிஷர்களிடத்தில் கூறும்போது, இந்த உலகத்தில் அவர்கள் துன்பத்தை சந்திக்க வேண்டும் என்பதை திட்டமாய் கூறினார் (யோவான் 16:33). எனவேதான், அவர் பிதாவினிடத்தில் தன் சிஷர்களுக்காக ஜெபிக்கும்போது,
"நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளவில்லை" என்றே ஜெபித்தார் (யோவான் 17:15). மேலும் அப்போஸ்தலர்கள் தங்களுடைய விசுவாசிகளுக்குப் போதிக்கும்போது
"அநேக உபத்திரவங்களின் வழியாய்தான் அவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியும்" என போதித்தார்கள் (அப்போஸ்தலர் 14:22).
மேலும் இயேசு கூறும்போது, "வீட்டு எஜமானையே 'பெயல்செபூல்' என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?" எனக் கூறினார் (மத்தேயு 10:25). பார்த்தீர்களா, இந்த அடையாளங்களை (நிந்தைகளை) வைத்துத்தான் நாம் அவருடைய உண்மையுள்ள வீட்டாராய் இருக்கிறோமா? அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்! என்னுடைய ஜீவிய காலத்தில் எத்தனையோ விசுவாசிகள் என்னை "பிசாசு" "பிசாசின் மகன்" "அசுத்தாவி பிடித்தவன்" "கொலைபாதகன்" "தியோத்திரேப்பு" என்றெல்லாம் கூறி அழைத்திருக்கிறார்கள்! இவ்வாறு நாம் இயேசுவின் வீட்டாராய் இனம் கண்டு சுட்டிக்காட்டப்படுவது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமேமாகும்! இன்று யாரெல்லாம் ஆண்டவருக்கு உத்தமமாய் ஊழியம் செய்கிறார்களோ, அவர்கள் யாவருக்குமே இந்த நிந்தை அனுபவம் நிச்சயம் கிட்டியிருக்கும்!!
ஒரு மெய்யான தீர்க்கதரிசி தன் "சொந்த இனத்தாரால்" ஒருபோதும் கனம் அடையமாட்டான் என்று இயேசு கூறினார் (மாற்கு 6:4). எந்தவொரு மெய்யான தீர்க்கதரிசியும் அவனுடைய சொந்த இனத்தாரால் புறக்கணிக்கப்பட்டு கனவீனமும் அடைவான்! இதைப்போலவே ஒரு மெய்யான அப்போஸ்தலனும், "தூஷிக்கப்பட்டு..... உலகத்தின் குப்பையைப் போலவும் எல்லாரும் துடைத்துப் போடுகிற அழுக்கைப் போலவும்..... கருதப்படுவார்கள்" என பவுல் கூறினார். (1 கொரிந்தியர் 4:13).... துன்புறுத்தப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் எத்தனையோ வல்லமையான தேவனுடைய ஊழியர்களுக்கு தேவன் நியமித்த பங்காகவே இருக்கிறது!
ஜெபம்:
எங்கள் அன்பின் தந்தையே! எங்கள் ஆண்டவர் இயேசு இவ்வுலகில் நடந்த பாதை துன்பத்தின் பாதை! ஆதலால் நாங்களும் மகிழ்வுடன் அந்தப் பாதை நடந்து முன்னேற கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments