இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 16
🔸️ சாத்தானை ஜெயித்து வாழ 3-முக்கிய ஆயுதங்கள்! 🔸️
வெளி 12:11-ல் "அவர்கள் அவனை ஜெயித்தார்கள்" என வாசிக்கிறோம். எவ்விதம் இவர்கள் சாத்தானை ஜெயித்தார்கள்? அதைக்குறித்து மூன்று ஆயுதங்கள் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
1) நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தம். "ஆண்டவராகிய இயேசுவே! நான் மனந்திரும்பி என் பாவங்களை அறிக்கை செய்து நீர் எனக்காக சிந்தின இரத்தத்தால் முற்றிலும் கழுவப்பட்டுவிட்டேன்" என்பதே நம்முடைய அறிக்கையாய் இருக்கிறது. இப்போது நாம் சாத்தானின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக வேண்டிய அவசியமே இல்லை. இந்த சாத்தான் நம்மை தேவனிடத்தில் குற்றஞ்சாட்டுவதோடு நில்லாமல் நம்மையும் குற்றம்சாட்டுவான். அவ்விதம் அவன் குற்றம் சாட்டும் பொழுது, "சாத்தானே! நீ குற்றம்சாட்டும் இந்த பாவங்கள் அனைத்திலிருந்தும் நான் மனந்திரும்பி அறிக்கை செய்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரால் முற்றிலும் மன்னிக்கப்பட்டு விட்டேன்!!" என நீங்கள் முழங்க வேண்டும்.
2) தங்கள் சாட்சியின் வசனத்தினால் அவனை ஜெயித்தார்கள். நாம் கூட்டங்களில் சாட்சி கொடுப்பதை இங்கு கூறவில்லை. சாத்தானுக்கு முன்பாக அறிக்கை செய்யும் சாட்சியே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவனை நேருக்கு நேர் தைரியமாய் எதிர்த்து நின்று, "சாத்தானே, நான் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவன்!" என நம் வார்த்தைகளினால் கூறிடும் சாட்சியாகும். இந்த சாட்சியே சாத்தானின் குற்றச்சாட்டுதலை ஜெயித்திட வல்லதாகும். அதுமாத்திரமல்லாமல், தேவனுடைய வாக்குத்தத்தத்தை அறிக்கை செய்தும் நாம் ஜெயித்திட முடியும்.
3) மரணம் நேரிடுகிறதாய் இருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல் இருந்தவர்களே சாத்தானை ஜெயித்தார்கள். அதாவது, இவர்கள் தங்கள் சிலுவையை எடுத்து அதில் மரிக்கும்படி தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள்! ஏனென்றால், கல்வாரி சிலுவையில்தான் இயேசு சாத்தானை ஜெயித்தார். இதைப்போல் நாம் நம்முடைய ஸ்தானத்தைக் "கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்" என வைத்திருந்து, ஒவ்வொரு நாளும் சிலுவையை எடுத்து சுயத்திற்கு மரிப்போமென்றால், நாமும் இயேசுவைப்போல் சாத்தானை சிலுவையில் வெற்றி சிறப்போம்!!
இந்த மூன்றுமே நம்முடைய தொடர்ச்சியான யுத்தத்திற்குரிய ஆயுதங்களாய் இருக்கிறது!!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! சாத்தானை ஜெயித்திட எங்களுக்கு கிருபையாய் அருளிய இந்த 3-ஆயுதங்களையும் விட்டுவிடாமல், தொடர்ந்து யுத்தம் செய்து ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேற கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments