இன்று "அவருடைய" சத்தம்
மே 24
🔸️ தேவனோடு நடந்து, பாவத்தை, உலகத்தை வெறுத்திட வேண்டும்! 🔸️
தன் காலத்தில் அவபக்தியாய் வாழ்ந்த ஜனங்களுக்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பை ஏனோக்கு தீர்க்கதரிசனமாக முன்னறிவித்தான் என யூதா 14, 15 வசனங்கள் கூறுகின்றன. ஆம், இந்த ஏனோக்கு ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தே தேவனோடு இசைந்து நடந்தான்!
என் ஜீவியத்தில் பிரபல்யமான பிரசங்கிகள் அநேகரை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்பிரசங்கிகளில் வெகுசிலரே தேவனோடு இசைந்து நடந்ததை கண்டேன்! இருப்பினும், இந்த வெகுசிலரே, நானும் தேவனோடு இசைந்து நடந்திட ஒரு தீராத வாஞ்சையின் வேட்கையை என் இருதயத்தில் உருவாக்கிவிட்டார்கள்!
மெத்தூசலாவின் பேரன் தான் நோவா! இந்த நோவா மெத்தூசலாவோடு 600 வருடங்கள் வாழ்ந்தான். ஆகவே நோவாவும் மெத்தூசலாவை சந்தித்த போதெல்லாம் அவனுடைய அப்பா ஏனோக்கு எவ்வாறு தேவனோடு நடந்தார் என அடிக்கடி கேட்டு விசாரித்திருப்பார்! அதன் மூலமாய் தானும் தேவனோடு இசைந்து நடக்க வேண்டுமே என்ற தீராத வாஞ்சையின் வேட்கை நோவாவின் இருதயத்திற்குள்ளும் வந்துவிட்டது!! ஆம், ஆதியாகமம் 6:9 கூறுகிறபடி, "நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்." இவ்வாறு நோவா தேவனோடே இசைந்து நடந்தபடியால்தான், பூர்வ உலகை தான் நியாயந்தீர்க்கப் போகிறதின் நோக்கத்தையும் அவனுக்குத் தேவன் வெளிப்படுத்தினார்.
இவ்வாறு தன்னோடு இசைந்து நடந்த முதல் இரண்டு மனிதர்களுக்கு தேவன் வெளிப்படுத்திய சத்தியம் "பாவத்திற்கு எதிரான நியாயத்தீர்ப்பின் சத்தியமே" ஆகும். இந்த சத்தியத்தின் செய்தியை ஏனோக்கும், நோவாவும் மிகுந்த உத்தமத்தோடு பிரசங்கித்தார்கள்! அவர்களின் செய்தியை ஒருவர்கூட விசுவாசிக்காததைக் குறித்து சற்றேனும்கூட அவர்கள் சஞ்சலம் அடையவில்லை!!
ஏனோக்கும், நோவாவுமே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்ட முதல் பிரசங்கிகளாய் இருக்கிறார்கள்! அந்த இருவரும் தேவனோடு நடந்தார்கள்!! தேவன் தனக்கென கொண்ட உத்தமமான ஒவ்வொரு பிரசங்கிகளும், இவ்வாறாகவே அவரோடு இசைந்து நடக்கிறவர்களாய் இருப்பார்கள்....பாவத்தையும் உலகத்தையும் கண்டித்துப் பேசுகிறவர்களாயும் இருப்பார்கள்!!
ஜெபம்:
பரம பிதாவே! உம்மோடு இசைவாய் நடந்த உம் தாசர்கள் பாவத்தையும் உலகத்தையும் வெறுத்து நியாயம் தீர்த்தது போலவே நாங்களும் வாழ்ந்திட, உமது இனிய ஐக்கியத்தை நாடுகிறோம்! கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments