🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣
☆ முன்னுரை
நாம் கடைசி காலத்தை நெருங்குகிற சமயத்தில், உலகிலுள்ள காரியங்களெல்லாம் மோசத்திலிருந்து மிக மோசமாகிக் கொண்டிருக்கிற சமயத்தில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குச் சற்று முன்பாக உண்டாகும் மிகுந்த உபத்திரவ காலத்தை நெருங்குகிற சமயத்தில், நாம் அதிகதிகமாக விசுவாசத்தினாலே பிழைப்பதைக் கற்றுக் கொள்ள வேண்டியது மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.
“விசுவாசம் கேள்வியினாலே (கேட்பதினாலே) வரும்; கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17).
இயேசு வனாந்திரத்திலே சாத்தானால் சோதிக்கப்பட்ட போதெல்லாம் தேவனுடைய வார்த்தையை மேற்கோள் காட்டினார். இப்படியாய் அவர் ஒவ்வொரு சோதனையையும் ஜெயித்தார். இயேசு தம்முடைய சிறு வயதிலிருந்தே, தேவனுடைய வார்த்தையைத் தம்முடைய மனதிலே சேகரித்து வைத்திருந்தார். அந்தப் பண்டக சாலையிலிருந்து, ஒவ்வொரு சோதனையின் தேவைக்கேற்ப, பரிசுத்த ஆவியானவர் அவருக்கு நினைவூட்டினார்.
நாமும்கூட தேவனுடைய வார்த்தையை நம்முடைய மனதிலே சேகரித்து வைக்க வேண்டும். நாம் வாசிப்பதை விசுவாசிக்க வேண்டும். நாம் இருதயத்தில் விசுவாசிப்பதை வாயினாலே அறிக்கை செய்ய வேண்டும் (ரோமர் 10:8,9). ஏனென்றால், நாம் “சாட்சியின் வசனத்தினாலே” சாத்தானை ஜெயிக்கிறோம் (வெளி 12:11).
ஆனால் நம்முடைய அறிக்கையானது, எப்பொழுதும் குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
நாம் நம்முடைய வாயினால் அறிக்கையிடுகிற எல்லாமே நமக்கு நடக்கும் என்றும், நாம் அறிக்கை செய்யும் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வோம் என்றும் சில பிரசங்கிகள் பிரசங்கிக்கின்றனர். அது ஓர் அனுமானமாகவும், மதியீனமாகவும்தான் இருக்கும். தேவன் அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவதாக நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். நாம் அனுமானித்துச் சொல்லுகிற காரியங்களை அல்ல. ஆகவே நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை தேவனுடைய வார்த்தையில் கண்டுபிடித்து, அவற்றை மட்டுமே அறிக்கை பண்ண வேண்டும்.
தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு நமக்கு உண்டாயிருக்கிற விசுவாசம்தான் இவ்வுலகத்தை ஜெயிக்கும் (1யோவான் 5:4).
மெய்யான விசுவாசம் என்பது தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு, அவருடைய சர்வ வல்லமை, அவருடைய பூரண ஞானம் ஆகியவற்றின் மீது பூரண நம்பிக்கை வைத்து, நம்முடைய ஆளுமை முழுவதும் அவர் மீது சார்ந்திருப்பதாகும்.
எனவே வரப்போகும் வருடத்தில், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினவற்றின் மீது விசுவாசம் வைத்து, தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட, கீழ்க்கண்ட எட்டு அறிக்கைகளை அடிக்கடி அறிக்கை செய்யுங்கள். அவற்றையெல்லாம் நீங்களே உங்களிடத்திலும், உங்களுடைய இருதயத்திலிருந்து சாத்தானிடத்திலும் சொல்லுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஒவ்வொரு அறிக்கையுடனும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வேதபகுதியையும் மனனம் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
எழுதியவர்: சகோ. சகரியா பூணன்
From:- https://t.me/slaveofchrist
------------------------------------------------------------
நாளை தொடரும்...
0 Comments