🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣
விசுவாச அறிக்கை - 2
தேவன் என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்துவிட்டார் – ஆகவே நான் ஒருபோதும் குற்ற உணர்வுடன் வாழ மாட்டேன்.
“நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான் 1:9).
“நான் அவர்களுடைய அக்கிரமங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எபி 8:12).
நம்முடைய கடந்தகால பாவங்களெல்லாம் நீக்கப்பட்டுவிட்டன என்ற நிச்சயத்துடனே நாம் எப்போதும் இளைப்பாற வேண்டும். நம்முடைய கடந்த காலத்தைக் குறித்து சாத்தான் எந்த விதத்திலும் நம்மைக் குற்றப்படுத்த, நாம் ஒருபோதும் இடம் தரக்கூடாது. நாமும் நம்மை ஆக்கினைக்குட்படுத்திக் கொள்ளவும் கூடாது.
எழுதியவர்: சகோ. சகரியா பூணன்
From:- https://t.me/slaveofchrist
------------------------------------------------------------
நாளை தொடரும்...
HD Picture Download: https://drive.google.com/file/d/1RY86vH6HaahfcuYxFNO5pWKl-nOsLcaU/view?usp=drivesdk
0 Comments