🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣
விசுவாச அறிக்கை - 6
என்னை பாதிக்கச் செய்யும் எல்லா மனிதரையும், நிகழ்வுகளையும் தேவன்தாமே கட்டுப்படுத்துகிறார் - ஆகவே நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிக்கிறேன்.
அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய வாழ்வில் அவருடைய சித்தம் மாத்திரமே நிறைவேற்றப்பட வேண்டுமென்று விரும்பினால், நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற யாவும் நன்மைக்காகவே நடக்கின்றது என்பதை நிச்சயத்துக் கொள்ளலாம். இந்த புது வருடத்திலே நாம் எதிர்கொள்ளப் போகிற ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நிகழ்வும் நம்முடைய நன்மைக்காகவே நடக்கப் போகின்றது என்பதை அறிந்து கொள்வது எத்துணை ஆச்சரியமான விஷயம்!
எழுதியவர்: சகோ. சகரியா பூணன்
From:- https://t.me/slaveofchrist
------------------------------------------------------------
நாளை தொடரும்...
HD Picture Download: https://drive.google.com/file/d/1SMOG_FaJXSjDacBaPnu4gyKdL6-Rlx8j/view?usp=drivesdk
0 Comments