Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 25

 இன்று "அவருடைய" சத்தம்


பிப்ரவரி 25


🔸️ ஜீவனைக் கண்டடைந்து, பிறருக்கும் பகிர்வதே வாழ்வின் சீரிய நோக்கம்! 🔸️


யாக்கோபின் வாழ்வில் பெத்தேலில்தான் சூரியன் அஸ்தமனமாகி விட்டது! அங்கு அவன் கண்ட சொப்பனத்தில், யாக்கோபின் வாழ்க்கையில் கொண்டிருக்கும் மேலான மகிமை நிறைந்த தன் நோக்கத்தை தேவன் அவனுக்கு வெளிப்பாடாய் தந்தார்! ஆனால் அதற்கு யாக்கோபின் பிரதிபலிப்பு என்னவாய் இருந்தது? அவன் சொன்னான், "கர்த்தாவே, நீர் தந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் அப்படியொன்றும் பெரிய ஆர்வம் எனக்கு ஒன்றுமில்லை! அதைவிட, நான் போகிற வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரம் தந்து, உடுக்க வஸ்திரமும் தந்துவிட்டால், அதுவே எனக்குப் போதும்! அப்படி நீர் செய்துவிட்டால், நீர் தரும் வருமானத்திலிருந்து உமக்கு நான் தசமபாகம் செலுத்துவேன்! உம்மை எனக்குத் தேவனாகவும் வைத்துக்கொள்வேன்!!" (ஆதி.28:20-22) என்றான்.


இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் இதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களை 'மகத்துவமானவைகளுக்கு' அழைத்திருக்க, அவர்களோ மிகத் தரங்குறைந்த அற்ப காரியங்களில் தங்கி திருப்தியடைந்து விடுகிறார்கள். தங்கள் முழு சக்திகளையும் தன் பணிக்கென செலவழிக்கும்படி அழைத்திருந்தும்...... அவர்களோ பணத்தை தேடுவதற்கும், இவ்வுலகத்தின் கனத்தைத் தேடுவதற்கும், தங்கள் ஜீவியத்தை வீணாக்கிப் போடுகிறார்கள்!! 


உத்தம மிஷனரியாய் ஊழியம் செய்த ஒரு பக்தன் தன் மகனை நோக்கி, "மகனே, நீ ஒரு மிஷனரியாக தேவனால் அழைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், நீயோ ஒரு மகாராஜாவாகவோ அல்லது ஒரு கோடீஸ்வரனாகவோ முன்னேறிச் செல்வதை நான் ஒருக்காலும் விரும்பமாட்டேன்! கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும் கனத்திற்கு முன்பாக, உன் ராஜ மேன்மையும் உன் பிரபு ஸ்தானமும் யாதொரு மேன்மையும் அல்லவே அல்ல!! என தலை நிமிர்ந்து முழங்கினார்.  


யாக்கோபைப் போலவே, நம்மிடத்திலும் தேவன் கொண்டிருக்கும் நோக்கம், சரீரப் பிரகாரமான ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும்விட மகா மேன்மை நிறைந்ததேயாகும்! 


அவருடைய நோக்கம் பொதுவாக இரண்டு முக்கியத்துவம் கொண்டதாகவே இருக்கிறது. முதலாவது முக்கியத்துவம், கிறிஸ்துவின் ஜீவியத்தை நாம் வாழ்ந்து வெளிப்படுத்துவதே ஆகும். இரண்டாவது, முக்கியத்துவம் அவர் தந்த ஜீவனை மற்றவர்களும் கண்டடையும்படி ஊழியம் செய்வதாகும்! இவைகளே ஒரு கிறிஸ்தவனுக்குள்ள மேன்மையான அழைப்பாகும்! இதைத்தவிர, இந்த பூமியில் வேறு உயர்ந்த அழைப்பு என எதுவுமே இல்லை!! 


ஜெபம்:

அன்பின் பிதாவே! உம்முடைய அழைப்பின் மேன்மையை உதாசினம் செய்யாமல், அதை நிறைவேற்றும் பாக்கியத்தை தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

3 Comments

  1. Brother for msg pls upload same msg English or Tamil..... every day

    ReplyDelete
    Replies
    1. https://chat.whatsapp.com/BtMPqp8NR3bHlvxpNrl3sk

      Delete