Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் 03

 இன்று "அவருடைய" சத்தம்


ஏப்ரல் 3


🔸️ பாவமன்னிப்பு மாத்திரமல்ல, பாவத்தின்மீது ஜெயம் தரும் சிலுவை! 🔸️


"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்" 

(லூக்கா 14:27) என இயேசு கூறினார். "அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு பிலாத்து அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு. . . கொல்கொதா என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப் போனார்..."(யோவான் 19:16-17). தன் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு என்ன விளக்கம் வேண்டும்? அதாவது, நாம் சிலுவையில் அறையப்படுவதற்கு எதிர்ப்பில்லாமல் வாய்ப்பு அளிக்கிறோமே, அதுதான் சரியான பொருள்! சிலுவையில் அறையப்படுவதன் அவசியத்தை உணர்ந்து கொண்டவர்கள் எவர்களோ, அவர்களே அதை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவார்கள்!!


உதவாக்கரை குற்றவாளிகளே சிலுவையில் அறையப்படுவார்கள்! தானே சிலுவையில் அறையப்படப்போகும் சிலுவையை சுமக்க யார் விரும்புவார்கள்? யாரெல்லாம் மாம்சத்தின்படியான தங்களை உதவாக்கரை குற்றவாளிகளாய் கண்டு, இப்போது அவனை ஒழித்துக்கட்டும்படி தங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி சொல்கிறார்களோ, அவர்கள்! தன் மகிழ்ச்சிக்கும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் தடைக்கல் தன் சுயமே என கண்டுபிடித்தவர்கள் தங்கள் மாம்சத்தை மகிழ்வுடன் சிலுவையில் அறைவார்கள்!!


"சிலுவையின் நிழலுக்கு வாருங்கள்" என்று பாடுவதை அதிகமாய் கேட்டிருக்கிறோம். ஆனால் வேதம் இவ்விதமான வார்த்தையை ஒரு இடத்தில்கூட குறிப்பிட்டுக் கூறவில்லையே! அதற்கு நேர்மாறாக "கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்படுங்கள்!" அல்லது "சிலுவையின் மேல் இருப்பதையே" வேதவசனம் கூறுகிறது. ஒருவேளை பாவமன்னிப்பை இச்சிலுவையின் நிழலில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பாவத்தின் மேல் ஜெயத்தை ஒருக்காலும் பெறவே முடியாது. அந்த ஜெயம் சிலுவையின் மேல்தான் பெற்றுக்கொள்ள முடியும்! சிலுவையின் கீழ் உள்ளவர்கள் பாவம் செய்ய முடியும். ஆனால் சிலுவையின் மேல் உள்ளவர்களால் அது முடியாது!! இந்த விசுவாசத்தின் இரகசியத்தைக் காணும்படி தேவன் இந்நாட்களில் அநேகருடைய கண்களைத் திறப்பாராக!!


ஜெபம்:

எங்கள் அன்பின் தகப்பனே! சிலுவையில் இத்தனை சிலாக்கியம் உண்டு என காணாத எங்கள் அறியாமையை மன்னியும்! இழந்த சிலாக்கியத்தை மீட்டு, பாவத்தை ஜெயித்திட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday





Post a Comment

0 Comments