இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 4
🔸️ மாம்சத்தில் பாடுபட்டு, பாவத்திலிருந்து ஓய்ந்திருங்கள்! 🔸️
பாவம் நமக்கு வெளியில் இல்லை! "பாவம் எனக்குள்ளேயே வாசமாயிருக்கிறது!!" (ரோமர் 7:20) என பவுல் கூறினார். "நான் கிறிஸ்துவுக்குள் நன்றாக இருந்தேன். இந்த அழகுள்ள ஸ்திரீ அல்லது ஆடவன் என்முன் வந்ததால் என் சிந்தையில் நான் பாவம் செய்துவிட்டேன்" என கூறாதீர்கள். ஏனெனில் உங்களுக்குள் இருக்கும் பாவமே உங்களை பாவம் செய்யத் தூண்டியது. இவ்வாறு நமக்குள்ளிருக்கும் "பாவ மாம்சம்" அல்லது "மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும்" சோதனை வேளையில் தேவகிருபை கொண்டு சிலுவையில் அறைந்து கொல்லுவதே இயேசுவைப்போல பாவத்தின்மீது நாம் அடையும் வெற்றியாகும்!
கிறிஸ்துவைப் போலவே, நாமும் மாம்சத்தில் பாடுபட்டால் (suffered in the flesh), அதாவது நம்மில் தூண்டப்படும் மாம்ச இச்சைகளை, அதன் ஆசைகளை சிலுவையில் அறைந்தால், நாமும் பாவத்தை விட்டு ஓய்ந்திருப்போம்! என தேவ வார்த்தை நமக்கு உத்திரவாதம் அளிக்கின்றது. ஆம், பாவத்தின் விளைவால் உண்டாகும் 'மரணத்தை' நாமும் ஜெயித்திட முடியும்!!
இவ்வாறு பாவத்தை ஜெயிப்பது என்பது வலுசர்ப்பத்தையும், சிங்கத்தையும் கொல்லுவதற்கு ஒப்பாகும்! இவர்களே கிருபை பெற்றவர்கள்! இவர்கள் ஒரே சோதனையில் வீழ்ந்து கொண்டேயிராமல், இயேசுவைப்போல் "எல்லாவிதத்திலும்" சோதிக்கப்படுவதற்கு தகுதி உடையவர்கள்.
உதாரணமாய், பாலிய இச்சையை எடுத்துக்கொள்ளுங்கள். இது கண்களின் இச்சையிலிருந்து தொடங்கி, ஒன்றன்பின் ஒன்றாய் ஏராளமான அசுசிகளை நம்மில் கொண்டிருக்கிறது!
தன் மாம்சத்தில் பாடுபட தீவிரம் கொண்ட ஒரு வாலிபன் அல்லது வாலிப ஸ்திரீக்கு தேவன் அதி நிச்சயமான தன் கிருபையைத் தருகின்றபடியால், சுமார் ஒரு வருடத்திற்குள் "கண்களின் இச்சையிலிருந்து ஓய்ந்துவிட முடியும்!" (2 பேதுரு 2:14).
இவ்வாறு பரிசுத்தத்தில் வளர்ந்து வரும் ஒரு பரிசுத்தவான், பாலிய இச்சையினால் தன் ஆவியில் ஏற்படும் சிறு சலனம் அல்லது உணர்ச்சிகளைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்துத் தன் மாம்சத்தை அவ்வளவாய் பாடுகளுக்குள் பங்கடையச் செய்திடுவான். இவ்வாறு இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுபவர்களே "கிருபையின் மேல் கிருபையைப்" பெற்றுக் கொண்டே இருப்பார்கள்!!
ஜெபம்:
அன்பின் பிதாவே! இந்நாள் வரை, எங்கள் மாம்சம் எங்களுக்குள் செழிப்புடன் வாழ விட்டுவிட்டோமே! இனியும் அப்படியில்லாமல், சிலுவை சுமந்து "மாம்சத்தில் பாடுபட்டு" பாவத்தில் ஓய்ந்திருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments