இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 30
🔸️ மனுஷர்களை கவர்ச்சிக்கும் நமது சுபாவம் மாறிட வேண்டும்! 🔸️
மனுஷர்களைக் கவரும்படி இயேசுவிடம் எந்த வெளித்தோற்ற கவர்ச்சியும் இல்லாதிருந்தது. அதுபோலவே, இன்று நம்மிலும், நம் சபைகளிலும் காணப்பட வேண்டும். அழகு கட்டிடம், அற்புத இன்னிசை, பிரசங்க பீடத்தின் அடுக்குமொழி பிரசங்கங்கள் போன்றவைகளால் நாம் ஒருபோதும் ஜனங்களை நம் மத்தியில் வரும்படி கவர்ச்சிக்கவே கூடாது (லூக்கா 16:15). தேவ பக்தியினால் மாத்திரமே ஜனங்களை நமதண்டையில் சேர்ப்பவர்களாய் இருக்க வேண்டும். எனவே இப்போது, நம்மிடம் காணப்படுபவர்கள் அத்தனை பேரும் தேவபக்தியில் பிரியம் கொண்டவர்கள் மாத்திரமே என்ற உறுதி கிடைத்துவிட்டதே!
செவிக்கினிய இன்னிசை, தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படுவதற்கு பெறும் மதிப்பெண் "பூஜ்யமே!" அப்போஸ்தலர்களில் ஒருவர்கூட பாடகர்களாய் இருக்கவில்லை. ஆயினும், இவர்களே உலகத்தை தலைகீழாய் திருப்பினார்கள்.
இன்று கிறிஸ்தவ உலகில் காணப்படும் இன்னிசை, பரிசுத்தாவிக்கு ஒரு மாற்றாக மாறிவிட்டது! இது எத்தனை பெரிய இழப்பு! பாடுகின்ற திறமை ஒரு மனுஷீக தராதரமே ஆகும். இத்திறமையை மனந்திரும்பாத ஜனங்களும் பெற்றிருக்கிறார்கள். பாடுவதற்கோ, அல்லது வாத்தியக்கருவி போடுவதற்கோ நாம் ஒருபோதும் எதிர்ப்பாளர்கள் கிடையாது. இவைகளை தேவன் உங்களுக்கு தந்தருளியிருப்பாரென்றால் தாராளமாய் அதை பிரயோகியுங்கள். "ஆனால்" வாத்தியக்கருவி இருப்பதாலும், எல்லோரும் இனிமையாய் பாடுவதாலும் நம் துதி தேவனுக்கு அதிக பிரியமாயிருக்கும் என எண்ணுவதுதான் சுத்த மதியீனம்! தேவன் நம் இருதயத்தையே எப்போதும் காண்கிறார்.
அநேக நேரங்களில் நடப்பது என்ன தெரியுமா? எல்லோரும் இனிமையாய் பாடிக்கொண்டிருக்கும்போது, சில சகோதர-சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் "முறுமுறுப்பு" கொண்டுவிடுகிறார்கள்! ஆ.... அந்தரங்கத்தில் தாளம் தப்புகிறதே, இதைத்தான் உண்மையாய் தேவன் கேட்கிறார்!! உங்கள் ரசனை சொட்டும் பாடல்களை ரசித்துக் கொண்டிருப்பதெல்லாம் அங்கு அமர்ந்திருக்கும் மனுஷீக சிந்தை நிறைந்த மானிடரே!!
இதைப் போலவே, இன்றைய கிறிஸ்தவ உலகில் எத்தனையோ ஜெபங்களும், பிரசங்கங்களும்....அலங்கார வார்த்தைகளோடும், கைகளை அங்கும் இங்கும் நீட்டி செய்கையோடும் செய்கிறார்கள். எதற்கு? எல்லாம் இந்த மனுஷர்களைக் கவர்வதற்குத்தான்! தேவனுடைய பார்வையிலோ இவை அத்தனையும் அருவருப்பானவைகள்!!
ஜெபம்:
பரம தந்தையே! உமது பார்வைக்கு அருமையாய் வாழாமல், மனுஷர் பார்வைக்காய் வாழ்ந்த, ஊழியம் செய்த எங்களை மன்னியும்! தேவனுக்கு முன்பாகவே வாழ்ந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments