Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 15

 இன்று "அவருடைய" சத்தம்


மே 15


🔸️ உபதேசமல்ல, "பரிசுத்தமாகுதலின் விருப்பமே" நம்மை மாற்றிவிடும்! 🔸️


பரிசுத்தமாகுதலைக் குறித்த என்ன உபதேசத்தை நாம் பெற்றிருக்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல! மெய்யான பரிசுத்தம், தன் முழு இருதயத்தோடு அதை நாடும் ஒருவருக்கு கிட்டுமேயல்லாமல், தன் தலையில் சரியான போதகத்தைப் பெற்றிருப்பவனுக்கு அந்த மெய் பரிசுத்தம் கிட்டுவதில்லை!    


உதாரணமாய், கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த பரிசுத்தவான்கள் கொண்டிருந்த உபதேசங்களை இங்கு மாதிரியாய் கூறிட முடியும். பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜான் ஃப்லெட்சர் என்ற பரிசுத்தவான் கொண்டிருந்த பரிசுத்தமாகுதலின் உபதேசத்தின்படி : "தாங்கள் ஏற்கனவே முற்றிலும் பரிசுத்தமாக்கப்பட்டதாக விசுவாசிப்பதும், தங்களிடம் உள்ள அறியாத பாவங்களையோ அவைகள் யாவும் "தவறுகள்தான்" என கூறுகிறவர்களாயும் இருந்தார்கள்.  


இதற்கு மாறாக, டேவிட் ப்ரைய்னார்டு போன்ற பக்தர்கள் வாழ்ந்த காலங்களில் "அறியாத பாவங்களும் பாவங்கள்தான் என கூறுகிறவர்களாயும், இன்னமும் தங்களிடம் இருக்கும் பாவத்தின் தன்மைகளுக்காகவும், தேவன்மீது கொண்ட தியானத்தின் குறைச்சலுக்காகவும், தங்கள் ஜீவகாலமெல்லாம் துயரம் கொள்ளும்" உபதேசத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள்! இந்த இரு குழுவினரும் தங்கள் ஜீவியத்தின் பரிசுத்தத்தை மதிப்பீடு செய்வதில் முற்றிலும் வேறுபட்டிருந்தாலும், தேவனுடைய பார்வையில் இந்த இரு குழுவினரின் பரிசுத்தமும் சமமாகவே காணப்பட்டது!! 


பரிசுத்தமாகுதலின் உபதேசத்தை விளங்கிக் கொண்ட இவர்களின் வித்தியாசமான அணுகு முறைகள், அவரவர் இருதயத்தின் பரிசுத்தத்தை அவரவர்களுக்குரிய வித்தியாசமான கோணத்தில் சீர்தூக்கிப் பார்க்கிறவர்களாகவே இருந்தார்கள்! ஆகவே, பரிசுத்தமாகுதலின் இரகசியம், கிரேக்க வார்த்தைகளின் அர்த்தத்தை விளங்கிக் கொள்வதாலோ அல்லது புதிய ஏற்பாட்டின் போதகங்களை சரியான அணுகு முறையில் கற்றுக் கொண்டதாலோ வருவதில்லை!


மாறாக, ஒரு முழு இருதயமான வாஞ்சையையும்..... தேவனைப் பிரியப்படுத்துவதற்கு கொண்ட தீராத விருப்பத்தையும் வைத்தே மெய்யான பரிசுத்தத்தை நாம் கண்டடைந்திட முடியும்!  


ஏனெனில், நம்முடைய இருதயத்தின் வாஞ்சையை காண்பதற்கே தேவன் ஆர்வமாய் இருக்கிறார் ....நம் மூளையில் உள்ள அறிவை காண்பதில் அவருக்கு எந்த பரவசமும் இருப்பதில்லை! 


ஜெபம்:

பரலோகப் பிதாவே! பரிசுத்தத்தைக் குறித்து அறிந்து கொண்டது எங்கள் மேன்மையல்ல! வாஞ்சையோடு அதை அடைந்திடும் வாழ்வை எங்களுக்குத் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments