இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 2
🔸️ சுய புத்தியை சாராது, தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்! 🔸️
ஒரு சீஷனுடைய வாழ்க்கையில் ஞானஸ்நானமே கீழ்ப்படிதலின் முதல்படியாய் இருக்கிறது. இக் கீழ்படிதலில் ஆரம்பிக்கும் இந்த சீஷனே......தொடர்ந்து தன் ஜீவிய காலமெல்லாம் கீழ்படியும் வாழ்விற்குள் பிரவேசிக்கிறான். மேலும் இவ்வித கீழ்ப்படிதல் காரண யுக்திக்கு உட்பட்டதாயில்லாமல் விசுவாசத்திற்குட்பட்டு "விசுவாசத்திற்கு கீழ்ப்படிதலாகவே" இருக்க வேண்டும்!
இயேசு தன் காரண யுக்தியை சார்ந்து இருப்பாரென்றால், தான் ஞானஸ்நானம் எடுக்கும்பொருட்டு யோவான் ஸ்நானகனிடம் ஒருபோதும் சென்றிருக்கமாட்டார். ஏனெனில், அவர் ஏன் ஞானஸ்நானம் எடுக்கத் தேவையில்லை என்பதற்கான வாதங்களை, குறிப்பாக "அவர் ஒருபோதும் பாவம் செய்யாதிருந்ததை" காரண யுக்தி ஒன்றன்பின் ஒன்றாய் இயேசுவுக்கு எடுத்துக்காட்டி இருக்கக்கூடும்! இயேசுவே ஞானஸ்நானம் எடுக்க வேண்டிய அவசியமென்ன? என்பதை யோவான் ஸ்நானகனால்கூட புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இயேசுவோ தன் காரண யுக்தின் வாதங்களை எல்லாம் புறம்பே தள்ளி விட்டு, பரிசுத்தாவியின் சத்தத்திற்கே கீழ்ப்படிந்துவிட தீவிரம் கொண்டார் (மத்தேயு 3:15).
"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல் உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு" என நீதிமொழிகள் 3:5 எடுத்துரைக்கிறது. ஆம், நம்முடைய சுய புத்தியின் காரணங்களே விசுவாசத்திற்கு முதல் எதிரியாகும்! ஏனென்றால் "மனுஷீக காரணங்கள்" ஒருக்காலும் ஆவிக்குரிய சத்தியங்களை புரிந்து கொள்ளாது!!
ஞானஸ்நானமா.....? அதெல்லாம் அற்பமான காரியம்! என கிறிஸ்தவர்களில் ஒரு கூட்டத்தார் எண்ணுகிறார்கள். "இதைப் போலவே" நாகமானும் முதலில் எலியாவின் கட்டளையை அற்பமாக எண்ணினான்! தன்னுடைய குஷ்டரோகம் சுகமாவதற்கு யோர்தான் நதியில் ஏழுதரம் மூழ்கும்படி கூறிய எலியாவின் கட்டளையை நாகமான் உதாசினம் செய்ய முற்பட்டான். ஆனால், பின்பு அவன் அக்கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படிந்தவுடன் ஆச்சரியமான சுகம் பெற்றான்! (2 இராஜா. 5:10-14). இது போன்ற சின்னச் சின்ன காரியங்களில்தான் தேவன் நம்முடைய கீழ்ப்படிதலை சோதித்தறிகிறார்.
ஜெபம்:
அன்பின் தகப்பனே! உம் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்திட தடையாய் வரும் எங்கள் சுயபுத்தியை மறுத்து வாழ கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments