Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 04

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 4


🔸️ நம் இருதயத்தில் 'விக்கிரகம்' அல்ல, தேவனே இருந்திட வேண்டும்! 🔸️


பழைய ஏற்பாட்டில் 'விக்கிரகங்கள்' வெளிப்படையான மரம் அல்லது தங்கம் அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட சொரூபங்களேயாகும். ஆனால் புதிய ஏற்பாட்டில் "உலக இலட்சியங்கள், உத்தியோகங்கள் அல்லது மனைவி அல்லது பிள்ளைகள்கூட" மிகத் தந்திரமான விக்கிரகங்களாய் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறது. மேற்கண்டவைகள் எல்லாம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எளிதில் முதலிடத்தைப் பற்றிக்கொண்டு தேவனை இரண்டாவது இடத்திற்கு கீழே தள்ளிவிட முடியும்!  


ஒருவன் தீமையானவைகளை மிக எளிதில் விட்டுவிடலாம்! ஆனால், இதுபோன்ற பூமிக்குரிய நல்லவைகளையும் விட்டுவிடும்படி தேவன் விரும்புகிறார் என்ற சத்தியத்தையோ இன்று அநேகர் ருசிக்கவேயில்லை!!  


இஸ்மவேல் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாய் தோன்றியவன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த இஸ்மவேலை அனுப்பிவிடும்படி தேவன் ஆபிரகாமிடம் கூறியபோது ஆபிரகாம் அப்படியே செய்தான் .... பின்பு ஆபிரகாம் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்மவேலைக் காணவேயில்லை! இது எப்படியெனில் தீமையானவைகளை வெறுத்துவிட்டு நல்மனசாட்சியோடு வாழும் வாழ்க்கைக்கு ஒப்பாகும். ஆனால் ஆபிரகாமுக்குத் தேவனே அருளிய அவனுடைய ஏக சுதன் ஈசாக்கை விட்டுவிட வேண்டும் என தேவன் கூறியதுதான் ஒரு கடுமையான பரீட்சையாக இருந்தது. 


தான் உரிமை கொண்டுள்ள, நல்லவைகளையும் ஒருவன் விட்டுவிடுவதே சுத்த இருதயத்திற்குரிய பரீட்சையாகும். பிரசங்கிப்பது, போதிப்பது, ஊழியம் செய்வது போன்ற ஆவிக்குரிய ஊழியங்கள்கூட ஒருவனுக்கு விக்கிரகமாக மாறக்கூடும்! அவைகளை விட்டுவிடும்படி தேவன் கூறும்போதுதான் ....அவ்வாறு விட்டுவிட அநேகர் தயங்குகிறார்கள். இந்த சோதனைதான் ஆபிரகாமுக்கு வந்தது. ஆனால் மோரியா மலையில் நிகழ்ந்த இந்த சோதனையை ஆபிரகாம் ஜெயித்துவிட்டார்!


இன்று சிலர் ஏதோ ஒருவகையில் தங்கள் பணத்தை இழக்கும்போது அதோடுகூட தங்கள் சந்தோஷத்தையும் இழந்து விடுகிறார்கள். இவர்களுடைய சந்தோஷம் பணத்தின்மீது இருக்கிறது என்பதையே இவ்வித நிகழ்ச்சி வெட்ட வெளிச்சமாக்குகிறது. ஆனால் தேவனோ, அவர்மீது மாத்திரமே நிறைவான மகிழ்ச்சி அடையும் வாழ்விற்குள் நம்மை நடத்த விரும்புகிறார். இவ்வாறு, தேவன் ஒருவரை மாத்திரமே தங்கள் மகிழ்ச்சியாய் கொண்டு அவருக்கு முதலிடம் கொடுத்து வாழ்பவர்களே சுத்த இருதயம் கொண்டவர்கள்! 


ஜெபம்:

பரலோக தகப்பனே! உம்மைத் தவிர வேறொரு 'விருப்பம்' உள்ளத்தில் இல்லாதிருப்பதே நீர் விரும்பும் சுத்த இருதயம் என அறிந்தோம். 'விக்கிரகத்திற்கு' விலகி வாழ தயை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments