Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 08

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 8


🔸️ நம்மையே பார்த்து அல்ல, இயேசுவைக் கண்டு விசுவாச ஓட்டம் வேண்டும்! 🔸️


முதலாவது "நமக்குள் இருப்பதை" நாம் கண்டு வாழ்ந்திடக் கூடாது. அவ்வாறு காணும்படி தேவன் நமக்கு கற்றுத்தரவும் இல்லை! நமக்குள்ளாய் இருப்பதைப் பார்த்துக் கொண்டு நாம் எவ்வாறு "பந்தயத்தில்" ஓட முடியும்? பரிசுத்தத்தைப் பிரசங்கித்திடும் நல்ல சபைகளில் தான் இந்த தவறு நடைபெறுவதை நான் கண்டிருக்கிறேன். சபையிலுள்ள அனேகர் இன்னமும் "தங்களைத்தான்" பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஜீவிப்பது பெருத்த மனசோர்வைத்தான் நமக்குள் கொண்டு வரும். ஏனெனில், நம் மாம்சத்தில்தான் 'நன்மை ஏதும்' வாசமாய் இல்லையே!!


ஓர் ஆவிக்குரிய மனிதன் 'எப்போதும்' முதலாவதாக, மேல்நோக்கி காண்பவனாகவே இருப்பான்! அந்த மேல்நோக்கிய பார்வையில் இயேசுவைக் கண்டு, இயேசுவின் அந்த மகிமைப் பிரகாசத்தில் பரிசுத்த ஆவியானவர் அவனுடைய தேவைகளை உணர்த்தி அவனுக்கு காட்டுவார் (எபிரேயர் 12:1).


தேவன் வகுத்த இந்த செம்மையான வழியில் நம்மைக் காணும் போதுதான், நாம் சோர்ந்து போய்விட மாட்டோம்!! "மனோதத்துவ ரீதியில்" தங்கள் ஜீவியத்தை மேம்படுத்த விரும்புகிறவர்கள் மாத்திரமே "தங்களையே" பார்த்துக் கொண்டிருப்பார்கள்! 


தேற்றரவாளனாகிய பரிசுத்தாவியானவர் வரும்போது, "என்னிடத்திலுள்ள யாவற்றையும் அவர் உங்களுக்கு எடுத்துக் காண்பிப்பார்!" என்றே இயேசு கூறினார். நாம் மெய்யாகவே ஆண்டவரோடு சேர்ந்து நடக்கிறோம் என்பதற்கும், நாம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தில் தொடர்ச்சியான நிறைவோடுதான் வாழுகிறோம் என்பதற்கும், உள்ள ஒரு முக்கியமான அடையாளம் என்னவெனில், "தேவ ஆவியானவர் இயேசுவை இன்னமும் சற்று அதிகமாய் நமக்கு வெளிப்படுத்தி காண்பிப்பார்!" என்பதேயாகும். 


எபேசியர் 4:24-ம் வசனத்தை சற்று கருத்தூன்றி வாசியுங்கள்: "மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்" என எவ்வளவு ஆணித்தரமாக இந்த வசனம் கூறுகிறது! இன்று பரிசுத்தத்தை பின்பற்றும் அனேகர் "பொய்யான பரிசுத்தத்தையே" பின்பற்றி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் சொந்த கண்களுக்கு பரிசுத்தர்களாய் காணப்படும் பொய்யான பரிசுத்தம்! ஆகவேதான் ஒரு ஆவிக்குரிய மனிதன் மேல்நோக்கி "இயேசுவை" முதலாவது கண்டு ....பின் அந்த வெளிச்சத்தில் தன்னையும் கண்டு, இயேசுவின் பரிசுத்தத்தில் முன்னேறுகிறான்!!


ஜெபம்:

பரலோக தந்தையே! எங்களையே கண்டு கண்டு மனம் நொந்துபோன எங்களை, உம்மைப் பார்த்து ஓடும்படி அழைத்த உற்சாகத்திற்கு மிக்க நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments