Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 16

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 16


🔸️ சாட்சியுள்ள ஜீவிய உப்பின் சாரத்தை இழந்து விடக்கூடாது! 🔸️


"நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது" (மத்தேயு 5:13) என இயேசு கூறினார்.


உப்பானது, இயேசுவின் நாட்களில் இறைச்சி உணவு கெடாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. அதாவது, தீமையை எதிர்க்கும் சின்னமாய் உப்பு விளங்கியது. அதைப்போலவே, ஒரு மெய் கிறிஸ்தவனும் தன் உத்தம சாட்சியுள்ள ஜீவியத்தின் மூலமாய் இவ்வுலகத்தின் தீமைகளை எதிர்த்து அவைகளை கட்டுப்படுத்துகிறான். இந்த சிலாக்கியம் இயேசு குறிப்பிட்டபடி ஒவ்வொரு மெய் கிறிஸ்தவனுக்கும் உரியதாகும். 


தீமைகளை இந்த உலகத்தை விட்டே நாம் இப்பொழுது விரட்டிவிட முடியாது. அவ்வித செயலை இயேசு மகிமையில் திரும்பி வரும்பொழுது அந்நாளில் செய்வார். ஆனால், நாமோ இப்போது உலகத்தின் தீமைகளை நம் சாட்சியுள்ள ஜீவியத்தின் மூலமாய் கட்டுப்படுத்துகிறவர்களாய் இருக்க முடியும்!!


உதாரணமாக, உங்கள் அலுவலகத்திலுள்ள ஓர் அறையில் அனேகர் உட்கார்ந்து கெட்ட வார்த்தை பேசிக்கொண்டு ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அச்சமயத்தில் ஒரு சாட்சி உள்ள உத்தம கிறிஸ்தவ ஜீவியம் செய்யும் நீங்கள் அந்த அறைக்குள் பிரவேசிக்கிறீர்கள். நீங்கள் பிரவேசித்த அடுத்த கணமே சலசலப்பு நீங்கி அமைதி உண்டாகிறது! ஆம், இதுவே ருசியுள்ள உப்பின் தீமையைக் கட்டுப்படுத்தும் சுபாவம் ஆகும். ஆனால் இதற்கு பதிலாய், நீங்கள் ருசியற்ற உப்பாக சாரமில்லாதிருந்தால் நீங்கள் அந்த அறைக்குள் சென்ற பின்பும் 'ஜோக்கும்' 'கெட்ட வார்த்தைகளும்' தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும்!!


ஆனால் நாமோ நம் அலுவலகத்திற்கோ, மனந்திரும்பாத உறவினர் வீடுகளுக்கோ அல்லது வேறு எந்த இடத்திற்கு சென்றாலும் நம்முடைய பிரவேசித்தால் பாவத்தையும், தீமையையும் கட்டுப்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது. இதுவே உப்பின் சாரமுள்ள வாழ்க்கை! இவ்வித ஜீவியத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே முன்மாதிரியாக வாழ்ந்து காண்பித்தார்.   


ஜெபம்:

பரலோக தந்தையே! மெய் கிறிஸ்தவ சாட்சியின் வாழ்க்கையை இழந்திடாது, அநேகரை விழிப்படையச் செய்திடும் "சாரமுள்ள உப்பின்" வாழ்க்கை எம்மில் நிலைத்திருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments