Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஆகஸ்ட் 20

 இன்று "அவருடைய" சத்தம்


ஆகஸ்ட் 20


🔸️ பாவத்தை நேர்மையாய் அறிக்கை செய்திட வேண்டும்! 🔸️


இன்று அநேக ஜனங்கள், "பிதாவே எங்கள் பாவங்களை மன்னியும்" என்று ஜெபிக்கிறார்கள். ஆனால், முதலாவது நாம் அவரிடம் பாவத்தை அறிக்கை செய்யாமல் நம் பாவங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்க முடியாது என்பதையோ இந்த ஜனங்கள் உணர்வதேயில்லை. ஆம், நாம் முதலாவது நூற்றுக்கு நூறு நேர்மையான உள்ளத்தோடு, நம் பாவங்களை மறைக்காமல் அவைகளை ஆண்டவரிடம் அறிக்கை செய்யவேண்டும். "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்" (நீதி 28:13) என தேவனுடைய வார்த்தை கூறுவதைக் கேளுங்கள். இருப்பினும், தன் பாவங்களை மறைக்கிறவன், "ஆண்டவரே, என்னை மன்னியும், மன்னியும்" என ஜெபித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால், இவ்வித ஒருவன் ஒருக்காலும் மன்னிக்கப்படவே மாட்டான்! "அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ (அவன் மாத்திரமே) இரக்கம் பெறுவான்" என்று நீதிமொழிகள் 28:13 தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்.


மேலும் பரிசுத்த வேதாகமம் கூறுவது யாதெனில், " நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் (இதை நாம்தான் செய்ய வேண்டும்), பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (Iயோவான் 1:9).


ஆதாம் பாவத்தில் வீழ்ச்சியடைந்த நாளிலிருந்து, மனுஷன் தன் பாவத்தை அறிக்கை செய்வதற்குப் பதிலாக, அவைகளை 'மறைக்கும்' சுபாவத்தையே பெற்றிருக்கிறான். ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தவுடன் அவர்களிடம் பிரதிபலித்த முதலாவது கிரியை என்ன தெரியுமா? அவர்கள் உடனே தேவனிடம் ஓடிச்சென்று, "ஓ! என் தேவனே!! எதைச் செய்யக்கூடாது என நீங்கள் என்னிடம் கூறினீர்களோ, அவைகளைச் செய்து விட்டோம்!" என்றா கூறினார்கள்? இல்லவே இல்லை! அவர்களோ, தேவனை விட்டு விலகி ஓடித் தங்களை ஒளித்து கொள்ளவே முயற்சித்தார்கள். இது எவ்வளவு பெரிய மதியீனம்! சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக இந்த ஆதாமும் ஏவாளும் ஒரு மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடுமோ?


நாம் செய்த தவற்றிற்கு நான் பொறுப்பாளி அல்ல, என சாதித்து நம்மை நியாயப்படுத்தவே எப்போதும் முயற்சிக்கிறோம். நாம் தவறு செய்யும்போது கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டால்கூட "இந்த சூழ்நிலை என்னை இப்படிச் செய்ய வைத்துவிட்டது" என்றும் "இதெல்லாம் என் பெலவீனம்" என்றும் சாமர்த்தியமாகவே கூறிவிடுகிறோம். இப்போது சம்பவிப்பது என்ன? 'இப்படிப்பட்ட நாம் ஒருக்காலும் தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவே மாட்டோம்' என்ற துரதிருஷ்டமே ஆகும்!!  


ஜெபம்:

எங்கள் அன்பின் பிதாவே! எவ்வித பாவமாக இருந்தாலும், உமது மன்னிப்பின் மாட்சிமையை சந்தேகிக்காமல், பாவத்தை 'மறைக்காமல்' அறிக்கை செய்து, உமது மன்னிப்பை பெற்றுக்கொள்ள கிருபை தாரும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments