இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 3
🔸️ நம்மைவிட்டு நீங்காத தெய்வ பிரசன்னம்! 🔸️
ஒரு சமயம், தேவனுடைய சமூகத்தில் தொடர்ச்சியாய் தங்கி வாழ்வதற்கு ஒரு சகோதரன் வாஞ்சை கொண்டார். இந்த இலக்கை அடைவதற்கு கடிகாரத்தின் ஒவ்வொரு ஒரு மணி நேர ஓசை நேரத்திலும் சுருக்கமாய் ஜெபிப்பதற்கு தன்னை பழக்கிக் கொண்டார்.
ஆனால், இடைநேரத்தில் உலக அலுவலில் ஈடுபடும்போது, தான் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து விலகுவதாக உணர்ந்தார். ஆகவே, கடிகாரத்தின் ஒவ்வொரு ஒரு மணி நேர ஓசை நேரத்திலும் தன்னை தேவனுடைய சமூகத்திற்கு மீண்டும் கொண்டு வர முயற்சித்தார். இவருடைய விருப்பம் நல்லதுதான். ஆனாலும், தொடர்ச்சியாக தேவ சமூகத்தை காத்துக்கொள்ளும் பாக்கியத்தை அவரால் அடைந்துவிட முடியவில்லை!
இவருடைய தவறு என்னவென்றால், தேவனுடைய சமூகத்தை வெளிப்புறமான தன்னுடைய "ஞாபக சக்தியில்" நிறுத்திவைக்க முயற்சித்தார்! அவருடைய ஞாபக சக்தியின் ஏற்றத் தாழ்வுக்கு இணங்க, தேவ சமூகத்தின் உணர்வும் அவருக்குள் ஏற்றத்தாழ்வுக்குள்ளாக்கியது!! இவ்வாறெல்லாம் தேவனுடைய சமூகத்தில் வாழ எத்தனிப்பது சுத்த மதியீனமே ஆகும்.
ஏனெனில், நம்முடைய ஆவியில்தான் தேவனுடைய சமூகம் இருக்கிறதேயல்லாமல், நம்முடைய ஞாபக சக்தியில் அல்ல!
இன்னும் சில விசுவாசிகள் தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது "தேவனுடைய பிரசன்னத்தில்" இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், மகிழ்ச்சி அவர்களை விட்டு நீங்கும்போது, தேவ பிரசன்னம் அவர்களை விட்டு நீங்கி விடுகிறது! இன்னும் சிலர் தாங்கள் அழுது துயரப்படும்போது, தேவன் அவர்களுக்கு சமீபத்தில் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், அந்தோ ஒருவன் தன் ஜீவ காலமெல்லாம் கண்ணீர் சொரிந்து கொண்டே இருக்க முடியாது! ஆகவே கண்ணீர் வற்றியவுடன் "தேவபிரசன்னமும்" நீங்கிப் போகிறது!!
உடைபட்ட ஒரு மனிதனின் அழகைக் காட்டிலும் மேலான அழகு ஒருவனிடத்தில் இல்லையென ஆணித்தரமாகக் கூறலாம். இதுபோன்ற ஒருவனிடம்தான் பிடிவாதமும், தூய-அன்பும் உடைபட்டு "சாந்தம்" மலர்ந்திட வழி பிறக்கிறது. இவனுடைய கடினமான ஓடு உடைகின்றபடியால், "நொறுங்குண்ட அவனது ஆவியின் மூலமாய்" தனது பிரசன்னத்தை நீங்காத ஐக்கியமாய் தந்தருளுகிறார்!
ஜெபம்:
பரலோக பிதாவே! எங்கள் உணர்ச்சிகளில் அல்ல, நொறுங்குண்ட ஜீவியத்தில் எங்கள் ஆவியில் தங்கியிருக்கும் உம்முடைய பிரசன்னத்தை எந்நாளும் காத்து வாழ கிருபை செய்தருளும்;
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments