Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 08

 இன்று "அவருடைய" சத்தம்


அக்டோபர் 8


🔸️ யாரைக்கொண்டும் தேவன் பயன்படுத்துவார்! 🔸️


தேவனுக்காக எழும்பி நிற்க வாஞ்சைகொண்ட யாவருக்கும் தேவன் தம் வேதத்தில் உற்சாக உத்வேகமூட்டும் வார்த்தைகளைப் பொழிந்திருக்கிறார். அன்று, எரேமியாவிற்கு பொழிந்த வார்த்தைகள் இன்று நாம் யாவருக்குமே உரிய வார்த்தைகளாய் இருக்கிறது! சற்றே தயங்கி "நான் பேச அறியாத வாலிபன்" என ஒதுங்கிய எரேமியாவை, தேவனுடைய வார்த்தைகள் அத்தனையாய் உற்சாகமூட்டி எழுப்பிவிட்டதுமல்லாமல், "ஒரு தீர்க்கதரிசியாய்" அவனது பணியை கர்த்தருக்கு செய்து முடித்திட கிருபையும் அளித்தது!!


தயங்கிநின்ற எரேமியாவை "நீ பயப்பட வேண்டாம்! நான் உன்னுடனே இருக்கிறேன்!" (எரேமியா 1:6-9) என்ற வார்த்தைகள் அவனைத் தட்டி எழுப்பியது. "நான் உனக்கு கட்டளையிடும் வார்த்தைகளை ஜனங்களிடத்தில் பேசு, அது போதும்" என்றே அவனை முன்னேறிச் செல்ல தூண்டினார். இங்குதான் அநேகருடைய விசுவாசம் தடுமாறுகிறது! "தங்களால் முடியாது" என எண்ணும் தடுமாற்றம்! இதுபோன்றவர்களுக்காகவே, ஒரு நாளில் தேவன் "பிலேயாமின் கழுதை" பேசும்படி செய்தார்! அதன் மூலமாய் தேவன் கூறும் செய்தி என்னவென்றால், ஒரு கழுதையைப் பேச வைத்த ஆண்டவர், உங்களையும் தன்னுடைய பணிக்கு பேச வைத்திட முடியும் என்பதுதான்!  


ஒருமுறை, எருசலேமுக்கு செல்ல இருந்த ஆண்டவர் இயேசு, "ஒரு கழுதைக்குட்டி" தனக்குத் தேவை என கேட்டு நின்றார். ஆம், ஒருவனைத் திட்டுவதற்கு "ஏய், கழுதை!" என்பார்களே.... அதாவது, "மதிகெட்ட மூடன்" என அழைப்பதற்கு ஏதுவான ஒருவனையே தேவன் இன்றும் பயன்படுத்துகிறார்.


இப்போதாவது, நீங்கள் சோர்ந்து தளர்ந்து போகாமல், தேவனிடம் கிட்டிச் சேர்வீர்களா?


நீங்கள் இருக்கும் வண்ணமாகவே அவரிடத்தில் வாருங்கள்! நீங்கள் யார் என்று அவருக்குத் தெரியும்... உங்களை வனைந்து அவருடைய தீர்மானம் உங்களில் நிச்சயம் நிறைவேறிட செய்வார்!


உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தேவன் தமக்கென ஒரு தீர்மானம் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து, அதை விசுவாசியுங்கள்!!


இந்த ஒப்பற்ற விசுவாசம் கொண்ட நீங்கள், தேவனிடத்தில் கிட்டிச் சேர்ந்து அவரைத் தேடுங்கள்! ஏனென்றால், "தம்மைத் தேடுகின்ற யாவருக்கும், தேவன் பலன் அளிக்கிறார்!! என (எபிரேயர் 11:6) வேதம் கெம்பீரித்து முழங்குகின்றதே!! அந்த பாக்கியம் நம் யாவரிலும் நிறைவேற தேவன் கிருபை செய்வாராக!!   


ஜெபம்:

எங்கள் பரம பிதாவே! உம்முடைய பணிக்கு அழைக்கப்படும்போது, உம்மை விசுவாசித்து, நாங்கள் இருக்கும் வண்ணமாகவே உம்மிடம் வந்து உம்முடைய பணி செய்திட கிருபை தாரும்! 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".    


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments