இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 10
🔸️ நம் இருதயம் அன்பில் அனல் கொண்டிருக்க வேண்டும்! 🔸️
ஆண்டவரோ நம்முடைய இருதயம் எப்போதும் அனல் கொண்டிருக்கவே விரும்புகிறார்! அவரை நேசிப்பதிலும், மற்ற விசுவாசிகளை நேசிப்பதிலும் இந்த அனல் எப்போதும் கொழுந்துவிட்டு எரிவதாகவே இருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டுப் பிரமாணம் நமக்கு எடுத்துக் கூறுகிறபடி, "பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கவேண்டும், அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது"
(லேவியராகமம் 6:13) என்ற தரத்தையே ஆண்டவர் எக்காலத்தும் நம்மில் எதிர்பார்க்கிறார்.
ஒரு உண்மையான இயேசுவின் சீஷனிடத்தில், அடிப்படை தகுதியாக தேவன் எதிர்பார்ப்பதையே இவ்வசனங்களில் நாம் காண்கிறோம். இந்தத் தகுதிக்குக் குறைவான அனைத்தும், "தரம் குறைந்ததே ஆகும்". முள்புதர் கர்த்தருடைய ஆவியினால் எரிந்து ஜூவாலிக்கும்போது, அதில் பூச்சியோ அல்லது எந்த ஒரு கிருமியோ நிச்சயமாய் உயிர் வாழ்ந்திட முடியாது. அதேபோல் நம்முடைய இருதயங்கள் ஆவியின் அக்கினியால் கொழுந்துவிட்டு எரியும்போது, அந்த இருதயத்தில் அன்பற்ற மனப்பான்மைகள் ஒருபோதும் தொடர்ந்து உயிருடன் வாழ்ந்திட முடியாது!
நாம் அனல் கொண்டிருக்கிறோமா அல்லது குளிர்ந்திருக்கிறோமா அல்லது வெதுவெதுப்பாய் இருக்கிறோமா என்பதைக் கண்டறிய "நம் அன்பின் மனப்பான்மையே" சோதித்தறிவதற்கு ஒரு சிறந்த வழியாகும். "அனல் கொண்டிருப்பது" பிறரை ஊக்கமாய் அன்புகூருவதாகும்! "குளிராய் இருப்பது" பிறரிடம் கசப்பும், மன்னிக்க முடியாத சுபாவமும் கொண்டிருப்பதாகும். "வெதுவெதுப்பாய் இருப்பது" பிறரிடத்தில் கசந்து இருப்பதும் இல்லை.... அன்பாயும் இருப்பதில்லை என்ற இக்கட்டான நிலையாகும்!!
ஒரு விசுவாசி "யாரைக் குறித்தும் என் இருதயத்தில் யாதொன்றுமில்லை" எனக் கூறுவானேயானால், அவன்தான் வெதுவெதுப்பாய் இருப்பவன். "உங்கள் இருதயங்களில் ஒருவருக்கொருவர் யாதொன்றும் இல்லாதிருக்கும்போது, நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்" என்றா இயேசு கூறினார்? அப்படியில்லவே இல்லை! ஒருவருக்கொருவர் தீய மனப்பான்மை இல்லாதிருப்பது மாத்திரம், இயேசுவின் சீஷர்களைக் கண்டறியும் அடையாளம் அல்லவே அல்ல!! (யோவான் 13:35).
மாறாக, நம் இருதயங்களில் நிச்சயம் ஏதாவது இருக்க வேண்டும். ஆம், நம் எல்லா விசுவாசிகளிடத்திலும் ஊக்கமான அன்பை நம் இருதயத்தில் நாம் பெற்றிருக்க வேண்டும்!
ஜெபம்:
அன்பின் பரம தந்தையே! அன்பு என்ற எங்கள் மனப்பான்மையில் யாவரிடமும் அனல் கொண்ட அன்பு நிலைத்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments