Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 11

 இன்று "அவருடைய" சத்தம்


அக்டோபர் 11


🔸️ இனியும் நாம் பிசாசிற்கு அஞ்சிடத் தேவையில்லை! 🔸️


மனுஷர்கள் யாவருமே சாத்தானுக்குப் பயந்திருக்கிறார்கள்! ஆண்டவர் நமக்கு காட்ட விரும்பும் முதல் பகுதி என்னவென்றால், சாத்தானுடைய சகல அதிகாரங்களும் சிலுவையிலே உரிக்கப்பட்டு, அங்கு அவன் தோல்வியடைந்தான் என்ற உண்மையே ஆகும் (கொலோசெயர் 2:15, எபிரேயர் 2:14). ஆகவேதான், ஒரு தேவனுடைய பிள்ளையை சாத்தான் எவ்விதத்திலும் தொட முடிவதில்லை. ஒரு நபரின் பரிசுத்தமாகுதலுக்கு கிரியை நடப்பிக்கும்படி சாத்தானை தேவன் அனுமதித்தால் மாத்திரமே அவனால் தொட முடியும்!


மேலும், தேவன் நமக்குக் காண்பிக்க விரும்பும் மற்றொரு பகுதி என்னவெனில், "சாத்தானுடைய சகல வல்லமையையும் மேற்கொள்வதற்குரிய அதிகாரத்தை" தேவன் தன்னுடைய எல்லா பிள்ளைகளுக்கும் கொடுத்திருக்கிறார் (லூக்கா 10:19) என்ற உண்மையே ஆகும்.


தங்கள் பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என அறிந்திடும் அநேக விசுவாசிகள்.... அதே சிலுவையில் சாத்தான் முற்றிலுமாய் தோற்கடிக்கப்பட்டான் என இன்னமும் அறியாதிருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் சாத்தானுக்கு அஞ்சி வாழ்ந்து, அதனிமித்தம் அடிக்கடி மனச்சோர்வடைகிறார்கள்!


இயேசு தன் சீடர்களிடம், "நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்..... விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்" எனக் கூறினார் (மாற்கு 16:15-17).


மானிட சரித்திரத்தின் ஆரம்ப காலங்களிலிருந்தே புருஷர்களும் ஸ்திரீகளும் பிசாசுகளினால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இயேசு வந்த பிறகுதான், ஜனங்கள் பிசாசுகளிடமிருந்து விடுதலை பெற்றார்கள்! ஆம், இப்போது சாத்தானை சிலுவையின்மேல் கிறிஸ்து தோற்கடித்துவிட்டார்! ஆகவே, எந்த மனுஷனுடைய பாவங்களும் இயேசுவின் நாமத்தில் முழுமையாக மன்னிக்கப்படுவது போலவே, இயேசுவின் நாமத்தில் எந்த மனுஷனும் பிசாசுகளின் பிடியிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற்றிட முடியும்! 


ஜெபம்:

எங்கள் அன்புள்ள பிதாவே! எங்கள் பாவங்களை மாத்திரமல்லாமல், சாத்தானையும் சிலுவையில் ஜெயித்த எங்கள் ஆண்டவர் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்! இனியும், அவனுக்கு எவ்விதத்திலும் அஞ்சிடாது வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments