இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 15
🔸️ ஆண்டவராகிய இயேசுவின் அடிச்சுவட்டில் 'மனச்சோர்விற்கு' இடமில்லை! 🔸️
இன்று ஒருசிலர், சோர்வடைந்துபோய் சாக விரும்பிய எலியாவின் மாதிரியை, தாங்கள் அடையும் சோர்விற்கு நியாயப்படுத்த சுட்டிக் காண்பிக்கின்றார்கள். ஆனால், சோர்வின் வலைக்குள் விழுந்த எலியாவோ அல்லது விபச்சாரத்திற்குள் விழுந்த தாவீதோ நம்முடைய மாதிரியுமல்ல, நமக்கு முன்னோடிகளும் அல்ல! ஆம், ஆண்டவராகிய இயேசு மாத்திரமே நம் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்! அவர் தன் ஆத்துமாவில், ஒரு காலத்தும் சோர்வடையவில்லை! அவருடைய ஆத்துமாவில் உலர்ந்துபோன சூனியமோ அல்லது காரிருளோ எக்காலத்தும் கவ்விக்கொண்டதில்லை! இவ்வாறு "இயேசு நடந்தபடியே நாமும் நடந்திட" (1யோவான் 2:6) அழைக்கப்பட்டிருக்கிறோமேயல்லாமல், எலியா நடந்தபடி நடப்பதற்கல்ல!
ஆனால், இன்றுள்ள அனேக மறுபடியும் பிறந்த விசுவாசிகள் தாங்களும் "இயேசு நடந்தது போலவே நடக்க முடியும்" என்பதை விசுவாசிப்பதில்லை. ஏனெனில், இவர்கள் கிறிஸ்து ஸ்தாபித்த புதிய உடன்படிக்கையை இன்னமும் விளங்கிக் கொள்ளாமலேயே இருக்கிறார்கள். பழைய உடன்படிக்கையின்கீழ் வாழ்ந்த பெரிய தீர்க்கதரிசிகளும் அனுபவிக்க முடியாத உயர்ந்த அளவின்படியான ஜீவியத்திற்குள், கிறிஸ்துவிலிருந்த தேவ வல்லமை தங்களை உயர்த்திட முடியும் என்ற சுவிசேஷத்தின் வல்லமையை இவர்கள், சிறிதேனும் பற்றிக் கொள்ளவில்லை! (மத்தேயு 11:11).
"இயேசு இருக்கிற பிரகாரமாகவே நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்" (1யோவான் 4:17) என்றே வேதம் நம்மைக் குறித்து கூறுகிறது! ஆகவேதான், "தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு சிலுவையை சகித்த இயேசுவை நோக்கி" நம் கிறிஸ்தவ ஓட்டத்தை நாம் ஓட வேண்டும்! (எபிரெயர் 12:1,2). அவ்வாறு நாம் செய்தால், நாம் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருந்திட முடியும்! (பிலிப்பியர் 4:4). அது மாத்திரமல்ல, "ஒன்றிற்கும் கவலைப்படாத" "மனச்சோர்வில்லாத" வாழ்க்கையை நாம் வாழ்ந்திடவும் முடியும் (பிலிப்பியர் 4:6; மத்தேயு 6:25-34).
ஜெபம்:
எங்கள் பரலோகப் பிதாவே! எத்தனை கொடிய சூழ்நிலையிலும் "மனச்சோர்வு" சிறிதும் இல்லாமல் நடந்த இயேசுவின் அடிச்சுவட்டை நாங்களும் விசுவாசத்துடன் பின்பற்றி வர கிருபை செய்தருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments