Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 30

"இன்று அவருடைய சத்தம்"

அக்டோபர் 30

🔸️ பிறருடைய வீழ்ச்சியில் அவர்களை நம் ஜெபத்தினால் தூக்கிவிட வேண்டும்! 🔸️

நல்ல சமாரியன் உவமையில் ஆசாரியனின் (பாதிரியார்) மனோபாவத்திற்கும், சமாரியனின் மனோபாவத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் காண்கிறோம்.  வீழ்ச்சியுற்றுக் கிடந்த மனிதனை ஆசாரியன் கண்டு "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நான் இவனைப்போல் வீழ்ச்சி அடையவில்லை!" எனக்கூறி விலகிச் சென்றிருப்பான் (லூக்கா 10:30-37). இன்றும், ஒரு விசுவாசி வீழ்ந்தவுடன் இந்த ஆசாரியனைப்போலவே இன்னொரு விசுவாசி நடந்து கொள்கிறார்! அவர் மற்றவர்களிடம் சென்று, "பாருங்கள், அந்த சகோதரன் விழுந்து விட்டார்" எனக் கூறுகிறார்!! அங்கே இந்த விசுவாசி மறைமுகமாகக் கூறுவது யாதெனில், "பார்த்தீர்களா! நான் வீழ்ச்சியடையவில்லை!" என்ற ஜம்பம்தான்!!

ஆனால், இவர்களுக்கெல்லாம் மாறாக, நல்ல சமாரியன் என்ன செய்தான்? அவன், தான் பாவத்திலிருந்து ஜெயம் பெற்றதற்காக ஆண்டவரை ஸ்தோத்திரித்துவிட்டு விலகிச் செல்லவில்லை. அவன் உடனே கீழே இறங்கி, தூக்கி எடுத்து... அவன் சுகமாகும்படி சத்திரத்துக்கும் கொண்டுபோனான்! இந்த உவமானத்தை இயேசு கூறிவிட்டு, "நீயும் போய் அந்தப்படியே செய்!" (லூக்.10:37) என்றே ஆணையிட்டார்.

இன்று நாம் ஒரு சகோதரனிடத்தில் பெலவீனத்தைக் காணும்பொழுது அல்லது அவன் தன் ஜீவியத்தின் ஒரு பகுதியில் வீழ்ச்சியடைவதைக் காணும்பொழுது,  இந்த நல்ல சமாரியனைப்போலவே மனோபாவம் கொண்டிருக்கிறோமா? அந்த சகோதரனை நம் ஜெபத்தினால் தூக்கி எடுத்து, அவன் குணம் அடையும்படி இயேசுவினிடத்தில் கொண்டு செல்கிறோமா? ஆம், நம் ஜீவியம் தேவனை மையமாகக் கொண்டிருக்கிறதா? இல்லையா? என்று அறிவதற்கு இவ்வித நிகழ்ச்சி நமக்குக் கிட்டும் நல்ல பரீட்சையாகும். 

"நான் மற்றவர்களை விட மிகுந்த ஆவிக்குரியவன்!" என காண்பிக்க இச்சிக்கும் சுயம்-மையம் கொண்ட விருப்பத்தினால்தான், பிறர் பாவத்தில் விழும்போது,  அவர்களிடம் நாம் அக்கறை காட்டுவதில்லை. இது மகா கொடிய தீமையாகும்!  நாமோ, வீழ்ச்சியுற்றவர்கள்மீது பரிதவித்து, அவர்களுக்காக ஜெபிக்கிறவர்களாய் மாறிட வேண்டும்!

ஜெபம்:
எங்கள் அன்பின் பிதாவே! நாங்கள் ஆவிக்குரிய பெருமை அற்றவர்களாய், பிறருடைய வீழ்ச்சியில் மெய்யான கரிசனை கொண்டு அவர்களுக்காக ஜெபித்திடும் தாழ்மை உள்ளம் தாரும்!  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.

"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".

    From:-
https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments