Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

டிசம்பர் 18

இன்று "அவருடைய" சத்தம்

டிசம்பர் 18

🔸️ துன்பங்கள் நமக்குள் கிறிஸ்துவின் சுபாவத்தை வளரச் செய்கிறது! 🔸️

"அவர் என்னை சோதித்தபின்பு  பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10).

ஏதோ தங்கள் கவலைகளையெல்லாம் தங்கள் கண்ணீரின் கடலுக்குள் மூழ்கடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், சிலர் பல வாரங்களாக அழுது கொண்டேயிருக்கிறார்கள்! இன்னும் சிலர், துக்கத்தின் சுமையால் நசுக்கப்பட்டு "இருதயத்தில் அழுகிறார்கள்".

துன்பங்களும், உபத்திரவங்களும் ஒரு மிக நல்ல நோக்கத்திற்காக மாறிவிட முடியும். அந்த நோக்கத்தை மனதில் கொண்டுதான் நம்மில் ஆழமாய் அன்புகூரும் சர்வ வல்ல தேவன், துன்பங்கள் நம் வாழ்வில் பிரவேசிக்க அனுமதிக்கிறார்.  உபத்திரவங்கள் நம் முழு குணாதிசயங்களையும் மாற்றிவிட முடியும்! கோடாரி தன்னை வெட்டும்போது சந்தனமரம் நல்ல வாசனையைப்  பரிமளிக்கிறது! அதைப்போலவே நாமும் துன்பத்தின்மூலம்,  தேவனிடத்தில் கற்றுக்கொண்ட நன்மையின் மூலமாய் தனக்குத் தீங்கு செய்தவர்களையும், மற்றவர்களையும், ஆசீர்வதிப்பவர்களாய்  மாறிவிட முடியும்! தேவனுக்கேற்றவர்களாய் நீங்கள் மாற வேண்டுமென்றால், ஏராளமான உபத்திரவங்களை நீங்கள் சந்தித்திடவும் ஆயத்தமாய் இருக்கவேண்டும்..... அதேசமயம், அந்த உபத்திரவங்கள் உங்களை அழுத்தும்படி அனுமதித்துவிடவும் கூடாது.

சில பக்தர்கள் துன்பத்தின் கொடிய ஆழத்திற்குள் சென்றிருக்கிறார்கள். இருப்பினும் அவர்களின் பக்தியான அனுபவங்கள் அளவில்லா  ஆசீர்வாதமாய் இருந்திருக்கிறது. துன்பங்களை சரியான விதத்தில் கையாள கற்றுக்கொண்டால், நாம் சீர் கொண்டவர்களாய் மாறிட முடியும் என்ற உண்மையை நாம் காண வேண்டும். இந்த துன்பம் என்னும் பள்ளிக்கூடத்தில் அருமையான பாடங்களை நாம் கற்றுக் கொள்ளுகிறோம்.  அந்தக் கல்வியின் இறுதியில் நாம் பெறும் பலனே "கிறிஸ்துவைப் போன்று மாறிடும் நம் சுபாவம்" ஆகும்!!

துன்பம் தரும் எந்த நிகழ்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் நமக்கில்லை. ஆனால், ஆண்டவர் அவைகளைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் "நமக்குள்" நன்மையான காரியங்கள் உண்டாகும்படிச் செய்திட முடியும்!! ஆம், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது" (ரோமர் 8:28).

ஜெபம்:
அன்பின் தகப்பனே! இவ்வுலகத்தின் துன்பங்கள் எங்களை கண்ணீருக்குள் ஆழ்த்திவிடாமல், அந்தத் துன்ப அக்கினி எங்களை சுத்தப்பொன்னாய்  உம்மைப்போல் மாற்றிடட்டும்!  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.

"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".

From:-
https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments