இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 21
🔸️ நமக்களித்த பிள்ளைகள் தேவன் திரும்ப பெற்றிடும் கடன்! 🔸️
தேவன் நமக்களித்த பிள்ளைகளிடம் நமக்கு இருக்கும் பொறுப்பை கீழ்காணும் கவிதை நேர்த்தியாக விளக்குகிறது:
"சொற்ப காலம் கடன் உன் பிள்ளை!" என்றார் தேவன்;
"உயிருள்ள மட்டும் நேசி,
மரித்ததும் திரும்ப எனக்குத் தந்துவிடு"
ஓராண்டு அல்லது இரண்டு அல்லது ஐந்து அல்லது நான்கு அல்லது மூன்று!
அவனை என்னிடம் அழைத்திடும் காலமும் விசாரிப்பாயோ?
அவன் தரும் பரவசமே உந்தன் மகிழ்ச்சி....
'அற்பமே' நீடிக்கலாம், அத்துயரத்தில்.....
அவனது ஞாபக நினைவுகளே உந்தன் ஆறுதல்!
நிரந்தரமாய் தந்திட வாக்குரைக்க இயன்றிடேன்.
பூமியில் யாவுமே திரும்பவே வரவேணும் அறிந்திடு!
பூமியில் கற்றிட பாடங்கள் அறிவேன்.... அதை
நான் தரும் குழந்தை கற்றிடவும் விரும்பினேன்..... அதற்கு,
போதகன் பெற்றிட பார் உலகும் தேடினேன். பூமியின் மாந்தரில் உன்னையே தெரிந்தேன்!
உன் அன்பு அனைத்தையும் அவனுக்கே தருவாயோ?
உன் பிரயாசம் அனைத்தையும் வீணென்று நினைப்பாயோ?
'காலம் முடிந்துவிட்ட பிள்ளையை' என்னிடம் சேர்த்திட
கரம் நீட்டி எடுக்கையில் என்னை வெறுத்திடாதிருப்பாயா?
பதிலுமே உரைத்திட்டார் பாங்குடன் பெற்றோரும்:
"அன்பின் தேவனே, உம் சித்தமாகட்டும்"
இப்பிள்ளை வழங்கட்டும் தெய்வீக மகிழ்ச்சி.
துயரமே வந்திட்டால் நாங்களும் சகிக்கட்டும்!
பட்சமாய் காத்துமே.....கடைசி மட்டும் அன்புமே!
அவன் அளித்திடும் ஆனந்தம் நன்றியுடன் பெறுவோமே!!
அவனுக்கென்று திட்டங்கள் முடியுமுன்னே நீர் வந்தால்......
கசந்த எம் துயரத்தில் தைரியம் தாங்குவோம்
உம் நோக்கம் ஒன்றையே அறிந்திடவும் நாடுவோம்...."
ஜெபம்:
எங்கள் அன்பின் தகப்பனே! பெற்றோர்களாகிய எங்களை நம்பி பிள்ளைகளை கடனாய் ஈந்தீரே! ஏற்ற விதமாய் போதித்து அன்புகூரவும், ஏற்ற வேளையில் மகிழ்வுடன் உம்மிடம் ஒப்படைக்கவும் கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments